முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      விளையாட்டு
Modi 2023 07 30

Source: provided

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர். விளைவு ஒன்றுதான் - இந்தியா வெற்றி பெற்றது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

______________________________________________________________________________________________________________

சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நமது ஆயுதப் படைக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தொடருக்கான எனது போட்டிக் கட்டணத்தை வழங்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் எப்போதும் என் நினைவுகளில் உள்ளீர்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

______________________________________________________________________________________________________________

பதிலடி கொடுத்த பும்ரா

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த மோதலில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுப் (6 ரன்), இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அவர் அவுட் ஆனதும், விமானத்தை வீழ்த்தியது போல் பும்ரா லேசாக சைகை காட்டினார்.

முன்னதாக ‘டாஸ்’ போடும் போது வர்ணனையாளர் இரு அணி வீரர்களிடமும் ‘டாஸ் முடிவு’ குறித்து பேட்டி காண்பது வழக்கம். ஆனால் வர்ணனையாளர் இந்தியாவின் ரவி சாஸ்திரி தங்களிடம் பேசுவதை விரும்பவில்லை என பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இறுதி ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக ‘டாஸ்’ நிகழ்ச்சியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் ரவிசாஸ்திரியும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிசும் பேசினர். 

______________________________________________________________________________________________________________

கோப்பையை வாங்க மறுப்பு

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.இதில் இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர். இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.

இதனிடையே, இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, "பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

______________________________________________________________________________________________________________

வெஸ்ட்இண்டீசுக்கு அதிர்ச்சி 

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த நேபாளம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் பவுடல் 38 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், நவின் பிடாய்சி 3 விக்கெட்டும் கைப்பற்றினர். 

தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீசுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் முழு உறுப்பினர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து