முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      இந்தியா
Thasv-2025-08-10

Source: provided

பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது. அதில் மது விலக்கு சட்டத்தில் இருந்து கள்ளுக்கடைகளுக்கு விலக்கு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

பீகாரில் மது விலக்கு சட்டத்தில் இருந்து கள்ளுக் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் இன்டியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி அறிவித்துள்ளார். மேலும் பீகாரில் மது விலக்கு சட்டத்தில் இருந்து கள்ளுக் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை , பழைய ஓய்வூதியத் திட்டமே அமல்படுத்தப்படும் என  243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரியனையில் அமரப்போவது யார்? என்பது நவம்பர் 140-ம் தேதி தெரியும். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது.

நிதிஷ் குமாரிடம் இருந்து ஆஅட்சியை இந்த முறை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதாவின் ஆர்.ஜே.டி.( ராஷ்ட்ரிய ஜனதா தளம்) காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஆனால் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை இன்னும் தொடங்கவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இன்டியா கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டது. கூட்டணி கட்சியினரே 12 தொகுதிகளில் மோதும் நிலை உருவாகி உள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக ராகுல் காந்திக்கும், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்விக்வுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியானது.

முதல்-மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை. மூத்த தலைவர் அசோக் கெலாட். இந்தநிலையில் பீகாரில் ராகுல் காந்தி நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார். முசாபர்பூர், தங்பங்கா ஆகிய 2 இடங்களில் அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார். முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சக்ரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.ராகுல் காந்தி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார்.

இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது இன்டியா கூட்டணி. இன்டியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. பீகார் மக்களுக்கு மரியாதை, பாதுகாப்பு வசதிகள் உறுதிப்படுத்தபடும் என தேஜஸ்வி வாக்குறுதி அளித்துள்ளார். 

மேலும் பீகாரில் மது விலக்கு சட்டத்தில் இருந்து கள்ளுக் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை , பழைய ஓய்வூதியத் திட்டமே அமல்படுத்தப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீகாரில் நாளை முதல் ராகுல் காந்தி பிரசாரம் தொடங்க உள்ள நிலையில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாட்னாவில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் இன்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து