முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: த.வெ.க. உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க. சார்பில் த.வெ.க. உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 4-ம் தேதி முதல்...

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நவம்பர் 4-ம் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அ.தி.மு.க., பாஜக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர ஓட்டலில்... 

சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, ஆஸ்டின் ஆகியோர் ஒவ்வொரு கட்சி தலைவர்களின் அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு கடிதம் கொடுத்தார்.  அந்த வகையில் த.வெ.க. கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பூச்சி முருகன் சந்தித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு கடிதத்தை வழங்கினார்.

த.மா.கா. - இ.கம்யூ.....

அதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க.தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சி அலுவலகங்களுக்கு சென்று பூச்சி முருகன் அழைப்பு கடிதம் வழங்கி உள்ளார்.

அழைப்பு கடிதங்கள்...

மற்றொரு தி.மு.க. தலைமை நிலையச்செயலாளரான துறைமுகம் காஜா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க. பொதுச்செ செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய. கட்சித் தலைவர் ஈசுவரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் மற்றும் நெல்லை முபாரக், தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா, ஜான்பாண்டியன் உள்ளிட்ட தலை வர்களின் கட்சி அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு கடிதங்களை வழங்கினார்.

60 கட்சி தலைவர்கள்...

மேலும் இன்னொரு தலைமை நிலையச் செயலாளரான ஆஸ்டினும் அழைப்பு கடிதங்களை வழங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி. டி.வி.தினகரன், அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர் செல்வம், பொன்குமார், பஷீர் அகமது உள்ளிட்ட 60 கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

3 பேருக்கு மட்டும்...

அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர்களுக்கு மட்டும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடக்கப்பட வில்லை என்று தி.மு.க. தலைமை நிர்வாகிகள் தெரிவித்தனர். த.வெ.க. தலைவர் விஜய் தி.மு.க. மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் அவரது கட்சி சார்பில் நிர்வாகிகள் பங்கேற்ஆர்களா? என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து