முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026-ம் ஆண்டு அ.தி.மு.க தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சியை நிறுவுவதே ஜெயலலிதாவிற்கு செலுத்தும் அஞ்சலி: நினைவு நாளை முன்னிட்டு இ.பி.எஸ். உறுதிமொழி

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      தமிழகம்
EPS-1 2025-12-05

சென்னை, அ.தி.மு.க. தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நல்லாட்சியை நிறுவி, ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களால் நான்.. மக்களுக்காக நான்" என்ற கர்ஜனை குரலுக்கு சொந்தக்காரர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 70 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த போதிலும், சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ம் மண்ணைவிட்டு மறைந்தார்.

அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்து நேற்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம், "மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி, நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை, இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம், ஜெயலலிதா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, அ.தி.மு.க. தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து