எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
முகமது ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை? என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் லேசான காயத்துடன் சிறப்பாக பந்து வீசிய ஷமி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அதன்பின் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்கை ஆற்றினார். ஆனால் அதன்பின் அவர் பிட்டாக இல்லை என்று சொல்லி இந்திய தேர்வுக்குழு கழற்றிவிட்டு வருகிறது. இருப்பினும் அவர் உள்ளூர் தொடர்களில் ஆடி தனது திறமையை நிரூபித்து வருகிறார். அதனை சுட்டிக்காட்டியே ஹர்பஜன் சிங் தற்போது விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ஷமி எங்கே? அவர் ஏன் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிகிறது, உங்களிடம் பிரசித் இருக்கிறார். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்தான். ஆனால் அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. உங்களிடம் நல்ல பந்து வீச்சாளர்கள் இருந்தனர். நீங்கள் மெதுவாக அவர்களை ஓரங்கட்டிவிட்டீர்கள். நமது பவுலிங் பும்ரா இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லையென்றால் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. பும்ரா இல்லாமல் வெற்றி பெறும் கலையை நாம் கற்க வேண்டும். இங்கிலாந்தில் அவர் இல்லாமலேயே சிராஜின் நம்ப முடியாத ஆட்டத்தால் நாம் டெஸ்ட் போட்டிகளை வென்றோம். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அது போன்ற கலவையைக் நீங்கள் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.
________________________________________________________________________________________________________________________________________
வரலாறு படைத்த லபுஷேன்
பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் புதிய வரலாறு படைத்துள்ளார். இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்டில் இந்த சாதனையை லபுஷேன் முதல் வீரராக நிகழ்த்தியுள்ளார். இரவு பகலாக ஆடப்படும் டெஸ்ட் போட்டிக்கு பிங்க் நிற பந்து பயன்படுத்துவதால் அதனை பிங்க் பந்து டெஸ்ட் போட்டி என அழைக்கிறார்கள். இந்த வகைமையில் முதல்முறையாக 1000-க்கும் அதிகமான ரன்களை குவித்த வீராரக மார்னஸ் லபுஷேன் வரலாறு படைத்துள்ளார்.
60 டெஸ்ட் போட்டிகளில் 4,560 ரன்களை எடுத்துள்ளார். அதில் 1,00க்கும் அதிகமாக இரவு - பகல் டெஸ்ட்டில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது 25-ஆவது டெஸ்ட் அரைசதத்தை நிறைவுசெய்த லபுஷேன் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பிங்க் பந்தில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வீரர்கள் வருமாறு., 1023 - மார்னஸ் லபுஷேன் (16 இன்னிங்ஸ்), 827* - ஸ்டீவ் ஸ்மித் (25 இன்னிங்ஸ்), 753 - டேவிட் வார்னர் (17 இன்னிங்ஸ்), 752 - டிராவிஸ் ஹெட் (16 இன்னிங்ஸ்).
________________________________________________________________________________________________________________________________________
கோலி ரசிகரின் தகவலால் அதிர்ச்சி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார். உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.
இந்நிலையில் அவரை ஜெயிலில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவக் வெளியாகி உள்ளது. அதில் போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசியவுடன், நான் விடுவிக்கப்பட்டேன் என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
________________________________________________________________________________________________________________________________________
விராட் கோலி குறித்து அஸ்வின்
தன்னுடைய திறமை குறித்து சந்தேகப்படுவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி இப்படி கொண்டாடுவதாக இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “விராட் ஏன் அப்படி கொண்டாடுகிறார்? அவர் என்ன நினைக்கிறார், என்ன அனுபவித்தார்? விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு வெளியேறினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இரண்டு நிகழ்வுகளும் மிகவும் ஒத்திசைவாக உணர்ந்தன. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசித்தார். எப்போதும் டெஸ்டில் விளையாட விரும்பினார். ஆனால் அவர் அதிலிருந்து ஓய்வு பெற்றார். ஏனெனில் அவரைச் சுற்றி உரையாடல்களும், டெஸ்ட் போட்டிகளில் அவர் ரன்கள் எடுக்காதது குறித்த கேள்விகளும் இருந்தன.
எவ்வாறாயினும் ஓய்வு பெறுவது ஒரு முக்கிய முடிவு. தற்போது அவர் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மக்கள் தனது திறமையை சந்தேகிக்கிறார்களா? என்று விராட் கோலி சிந்தித்து கொண்டிருப்பார். தனது திறமை என்பதை அனைவருக்கும் காட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். சில சமயங்களில் நீங்கள் வலுக்கட்டாயமாக உங்களை நிரூபிக்க முயற்சிக்கும் போது அது நடக்காமல் போகலாம். ஒருவேளை கடந்த காலத்தில் விராட்டுக்கு அது நடந்திருக்கலாம். ஆனால் தற்போது என்னையா சந்தேகத்தீர்கள்? என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறேன் என்ற வகையில் விளையாடுகிறார். அவர் ஒரு நல்ல மனநிலையில் இருக்கிறார்” என்று கூறினார்.
________________________________________________________________________________________________________________________________________
சுனில் நரைன் '600' விக்கெட்
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), சர்வதேச லீக் 'டி-20' 4வது சீசன் நடக்கிறது. ஷார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி (233/4), 39 ரன் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியை (194/9) வீழ்த்தியது. இப்போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்திய அபுதாபி அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் 37, ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் 600 விக்கெட் சாய்த்த 3வது பவுலரானார்.
கோல்கட்டா, லாஸ் ஏஞ்சல்ஸ், கயானா, சிட்னி சிக்சர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கான விளையாடிய இவர், 568 போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார். ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (681 விக்கெட், 499 போட்டி), வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ (631 விக்கெட், 582 போட்டி) இந்த இலக்கை கடந்தனர்.
________________________________________________________________________________________________________________________________________
வைரலாகும் ஹைடன் மகளின் பதிவு
ஜோ ரூட் சதத்தினால் முன்னாள் ஆஸி. வீரர் மேத்திவ் ஹைடனின் நிர்வாண ஊர்வலம் காப்பாற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஹைடனின் மகளும் கருத்து தெரிவித்துள்ளது சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல் ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் சதமடிக்காமல் இருந்தார். இந்தத் தொடருக்கு முன்பாக முன்னாள் ஆஸி. வீரர் மேத்திவ் ஹைடன் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் தான் நிர்வாணமாக மெல்போர்ன் கிரிக்கெட் திடலைச் சுற்றிவருவதாகக் கூறினார்.
தற்போது, இரண்டாவது டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம் அடித்து ஹைடனின் நிர்வாண ஊர்வலத்தை காப்பாற்றி விட்டார். இது குறித்து வர்ணனையாளராக இருக்கும் ஹைடனின் மகளான கிரேஸ் ஹைடன் பேசியவை கவனம் ஈர்த்து வருகின்றன. போட்டியின்போது கிரேஸ் ஹைடன், ”தயவுசெய்து சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்” எனக் கூறினார். சதம் அடித்ததும், “மிக்க நன்றி ஜோ ரூட். நீங்கள் எங்களது கண்களைக் காப்பாற்றிவிட்டீர்கள்” எனக் கூறினார். மேலும் தனது இன்ஸ்டா பதிவிலும் இது குறித்து பதிவிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


