முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      இந்தியா
P R Kawai 2025-05-19

Source: provided

புதுடெல்லி : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த சூழலில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் விசாரணை ஐகோர்ட் கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. அப்போது மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை. இந்த சூழலில் நேற்று முன்தினம் உத்தரவு நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு விவகாரத்தில் 3 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதை நிறைவேற்றவில்லை. சி.ஐ.எஸ்.எப் படையினர் திருப்பரங்குன்றம் சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் ஏன் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட் மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டிருந்தநிலையில், ஆவணங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசையின் அடிப்படையில் விரைவில் பட்டியலிடப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். 

முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது.,  கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை;100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது. 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதைக் கூறியுள்ளது; அதன்படியே அரசு செயல்படுகிறது. புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே, அங்கு அனுமதி அளிப்பது இல்லை ஐகோர்ட் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து