திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் சி அறை திறப்பு

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், பிப். - 28 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பொக்கிஷங்கள் உள்ளதாக கருதப்படும் சி அறை நேற்று திறக்கப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிடும் பணி கடந்த 20 ம் தேதி தொடங்கியது. மதிப்பீட்டு குழு தலைவர் வேலாயுதன் நாயர் தலைமையில் இந்த பணி நடக்கிறது. முதலில் சி அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த அறையை திருவனந்தபுரம் மாவட்ட சார்பு நீதிமன்றம் பூட்டி சீல் வைத்து இருந்ததால் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இ மற்றும் எப் அறைகள் முதலில் திறக்கப்பட்டன. இந்நிலையில் சி ரகசிய அறையை திறக்க கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த அறை நேற்று திறக்கப்பட்டு பொக்கிஷங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன. மாலை 5 மணி வரை வல்லுனர் குழு உறுப்பினர்கள் பொக்கிஷங்களை மதிப்பிடுவர்.  ஏற்கனவே சி அறையை திறந்தால் சுனாமி அல்லது பேரழிவு ஏற்படும் என்று வதந்தி கிளப்பப்பட்டிருப்பதால் திருவனந்தபும் உட்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க சிறப்பு அறை கட்டப்பட உள்ளதாக மதிப்பீட்டு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த உயர்நிலை குழுவின் தலைவர் வேலாயுதம் நாயர் கூறும் போது,  பொக்கிஷங்களுக்கான சிறப்பு அறை எங்கு கட்டப்படவுள்ளது மற்றும் எத்தகைய பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்படவுள்ளது என்பது குறித்த அறிக்கை 3 வாரத்தில் தாக்கல் செய்யப்படும். பின்னர் இந்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: