எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.27 - முல்லைப் பெரியாறு அணையில் உள்ள துளைகளை மூடாவிட்டால், சதித்திட்டம் செய்து, இத்துளைகளையே பயன்படுத்தி, கேரளத்தினர் அணையை உடைக்கக்கூடும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். இது தொடர்பாக .நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தென்தமிழ்நாட்டில் 2,17,000 ஏக்கர் விவசாயிகளின் பாசனத்திற்கும், 85 லட்சம் மக்களின் குடிநீருக்கும் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு அணையை, எவ்விதத்திலும் உடைத்து விடுவது என்று கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு, பல வழிகளில் முயற்சிகள் நடக்கின்றன.
இந்தப் பிரச்சனையில், உச்ச நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு, பிப்ரவரி 27-ல், தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமையை நிலைநாட்டித் தந்த தீர்ப்பை, குப்பையில் தூக்கி எறிவது போல, கேரள அரசு, அக்கிரமமாக நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து, அன்றைய அதிமுக அரசு, உச்ச
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
மூன்றரை ஆண்டுகள் கேரள அரசு வாய்தா கேட்டு வழக்கை இழுத்தடித்தது. தமிழ்நாட்டுக்கு நீதி உறுதிப்படுத்தப்படும் நிலையைத் தடுப்பதற்காக, வழக்கை அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற முன்வைத்த கோரிக்கையை எதிர்க்க வேண்டிய கடமையைச் செய்யாமல், கருணாநிதி அரசு இசைவு தந்ததால், தமிழகத்துக்குப் பாதகமான பின்னடைவு ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, முல்லைப்பெரியாறு அணையின் வலிமையை ஆய்வு செய்ய, நீதிபதி ஆனந்த் தலைமையில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட அதிகாரக் குழுவை நியமித்தது. அக்குழுவின் ஏற்பாட்டில், எட்டு வல்லுநர் குழுக்கள் அளித்த, அணையின் வலிமை குறித்த 13 அறிக்கைகளை உள்ளடக்கி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் குழு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. மே 4 ஆம் தேதி, உச்ச நீ
திமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கின்றது.
பாலை நிலமாகும்....
முல்லைப்பெரியாறு அணையில் குடைந்த துளைகளை, உடனடியாக மூடுவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதைத் தடுப்பதற்கு முனையும் கேரள அரசை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்''
இதற்கு இடையில், அணையின் வலு குறித்து ஆய்வு செய்வதற்கு, பிரதான அணையில் நவீன கருவிகளைக் கொண்டு, ஏழு துளைகளைக் குடைந்தனர். 130 அடி ஆழம் முதல், மையப்பகுதியில் 190 அடிகள் வரையிலும், ஆறு அங்குல விட்டத்தில், செங்குத்தாக இந்தத் துளைகள் குடையப்பட்டன. ஒரு துளையில் கருவி சிக்கிக்கொண்டதால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டார்கள். வெளியில் எடுத்து, குழியை மூடவில்லை.
அனைத்துச் சோதனைகளும் முடிந்த பின்னர், துளைகளை மூடுவதற்குத் தமிழகப் பொறியாளர்கள் முயன்றபோது, கேரளப் பொறியாளர்களும், அதிகாரிகளும், காவல்துறையினரும் மிரட்டி அச்சுறுத்தித் தடுத்து விட்டார்கள். இந்த ஆழமான துளைகளில் தண்ணீர் தேங்குமானால், அதில் இருந்து தண்ணீர் வடிவதற்கும், பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக, அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் அஞ்சுகிறார்கள்.
அணையைப் பராமரிக்கின்ற முழு உரிமையும், அதிகாரமும், தமிழக அரசுக்குத்தான் உண்டு. நமக்கு உரிமை உள்ள, பென்னி குயிக் கட்டிய அணையில், ஆழமான துளையைப் போட்டு அணைக்கட்டின் கலவையை மாதிரி எடுத்தபிறகு, துளைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். பிரதான அணையில் ஏழு துளைகளும், பேபி அணையில் ஒரு துளையும் குடையப்பட்டன.
நமக்கு உரிமை உள்ள அணையை உடைப்பதற்கு, கேரள அரசு மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்திலேயே ஐம்பது கோடி ரூபாயை ஒதுக்கியதோடு, புதிய அணை கட்ட 668 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையையும், நீதிபதி ஆனந்த் குழுவினரிடம் தந்ததோடு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சலிடமும் ஒப்புதல் பெறக் கொடுத்து உள்ளது.
புதிய அணைக்கான ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததே, மத்திய அரசு தமிழ்நாட்டுக்குச் செய்த பச்சைத் துரோகம் ஆகும். அணையை உடைக்கின்ற நடவடிக்கைகளில், கேரளத்தினர் ஈடுபட்டதால்தான், தமிழகம் கொந்தளித்து எழுந்தது; பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடந்தது. நரித்தந்திரத்தோடு கேரளம் தற்போது பதுங்கி இருக்கிறது. அணையை உடைப்பதற்காக வெடிமருந்தையும் கேரளத்தினர் ஆயத்தமாக வைத்து உள்ளனர். நமது அணையில் உள்ள துளைகளை மூடாவிட்டால், சதித்திட்டம் செய்து, இத்துளைகளையே பயன்படுத்தி, கேரளத்தினர் அணையை உடைக்கவும் கூடும்.
அப்படி ஒரு பேராபத்து ஏற்பட்டுவிட்டால், தென்தமிழ்நாடு, தாங்க முடியாத துன்பத்துக்கும் துயரத்துக்கும் உள்ளாக நேரும். பாலை நிலமாகி, பஞ்சமும், பட்டினியும் வாட்டி வதைக்கும் அபாயம் ஏற்படும். வருமுன் காப்பதுதான் அறிவுடைமை ஆகும். எனவே, முல்லைப்பெரியாறு அணையில் குடைந்த துளைகளை, உடனடியாக மூடுவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதைத் தடுப்பதற்கு முனையும் கேரள அரசை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வைகோ எச்சரித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.