முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலிண்டர் இருப்பு 2 நாட்களுக்கே உள்ளதாம்...!

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி, ஏப். 28 - நாடு முழுவதும் சமையல் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் இன்னும் 6 நாட்கள் வரை சப்ளை செய்வதற்கு உரிய சிலிண்டர்களே இருப்பில் உள்ளன. இந்தியன் ஆயில் கார்பரேசன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் உள்ளன. இதன் காரணமாக தேவையான எரிவாயு சிலிண்டர்களை பாட்டலிங் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எரிவாயுவை சிலிண்டர்களில் நிரப்பும் தொழிற்சாலைகளில் இருப்பு மிக குறைவாக உள்ளது. தமிழ்நாடு உட்பட சில தென் மாநிலங்களில் பதிவு செய்து இரண்டரை மாதங்கள் கழித்தே சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் இந்த தடவை நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தேசிய அளவில் 2.9 லட்சம் டன் எல்.பி.ஜி. சிலிண்டர்களே இருப்பில் உள்ளன. இது 6 நாட்களுக்கு மட்டுமே சப்ளைக்கு ஆகும். இதை விட மோசமாக தென் மாநிலங்களுக்கான இருப்பு 35 ஆயிரம் டன்கள்தான் என்று கூறப்படுகிறது. இது இன்னும் 2 நாட்களுக்கே போதுமானதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்