சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் மதுரை மீனாட்சிக்கு இன்று பட்டாபிஷேகம்

திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,ஏப்.- 30 - மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.  மதுரை மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் இன்று முதல் துவங்குகிறது. 8ம் திருவிழாவான இன்று காலை சபாநாயகர் புறப்பாடாகி சுந்தரர் பொருட்டு சிவபெருமான் நிகழ்த்தியருளிய ஊடல் உற்சவ லீலை நடைபெறும். காலை 10 மணிக்கு அம்மன், சுவாமி தங்கப்பல்லக்கில் புறப்பாடாகி சித்திரை வீதிகளில் வலம் வருகிறார்கள்.  மாலை 3மணியளவில் மண்டகப்படியில் இருந்து எழுந்தருளி திருக்கோவில் வந்தடைகிறார்கள். இரவு 7.30மணிக்கு மேல் இரவு 7.56மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் அம்மன்சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் இழைத்த தங்க கிரீடம் சாற்றி ரத்தினங்கள் இழைத்த செங்கோல் சாற்றி ஆராதனைகளுடன் பட்டாபிஷேகம் நடைபெறும்.   இந்த நிகழ்ச்சியில் மீனாட்சியம்மை மதுரை நகரின் ஆட்சி  பொறுப்பை ஏற்பது என்பது ஐதீகம் ஆகும். சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாகவும் ஐதீகம். அப்போது திருக்கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மீனாட்சிஅம்மனிடம் இருந்து அவரின்பிரதிநிதியாக செங்கோலை பெற்ற சகல விருதுகளுடன் அம்மன் சன்னதியில் இருந்து பிரகாரம் சுற்றி மீனாட்சி அம்மன் திருக்கலத்தில் மீண்டும் செங்கோல் சாத்தப்படும். பின்பு அம்மன், சுவாமி இரவு 8 மணிக்கு வெள்ளி சிம்மவாகனத்தில் புறப்பாடு ஆகிறார்கள்.  வருகிற 2ம் தேதி மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்காக வடக்காடி வீதியில் திருக்கல்யாண மேடை அமைக்கப்பட்டு வருகிறது. 3ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: