முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலமோசடி: கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. மீண்டும் கைது

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

மதுரை, செப்.6 - ரூ.2 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. மீண்டும் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடந்து வரும் கிரானைட் குவாரிகளில் ஏராளமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப் பட்டதை தொடர்ந்து பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் அதிபர் பி.பழனிச்சாமி, கிரானைட் அதிபர் பன்னீர் முகமது மற்றும் அரசு அதிகாரிகள், டாமின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டுள்ளனர். ஒலம்பஸ் கிரானைட் இயக்குனரும், மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி உட்பட பல்வேறு குவாரி அதிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இநத நிலையில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த சுமதி என்பவர் மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில் தனது கணவர் பிச்சை, அவரது சகோதரர் மூர்த்தி மற்றும் 2 சகோதரிகளுக்கு சொந்தமான நரசிங்கம் பட்டியில் உள்ள 1.25 ஏக்கர் நிலத்தை சகோதரர் மூர்த்தி யாருக்கும் தெரியாமல்கிரானைட் அதிபர் பி.ஆர்.பி.க்கு விற்பனை செய்து விட்டார். இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும். 4 பேருக்கு உரிய பங்கை எங்களுக்கு தெரியாமல் விற்பனை செய்த மூர்த்தி மற்றும் பி.ஆர்.பி. முத்துக்குமார், போஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது இடத்தை மீட்டுத் தரும்படி கோரியிருந்தார். 

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பி.பழனிச்சாமி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் பி.ஆர்.பி.யை குற்றப்பிரிவு போலீசார் நேற்று மீண்டும் கைது செய்தனர். 

பின்னர் அவரை மதுரை ஜே.எம். 1 கோர் ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 18ம் தேதி வரை காவலில் வைக்க  நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பி.ஆர்.பி. மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony