முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட்: பாக்., ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், செப். 6 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற முதலாவது டி - 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெ ற்று 1- 0 என்ற கணக்கில் இந்தத் தொட ரில் முன்னிலை பெற்று உள்ளது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், கம்ரான் அக்மல் மற்றும் இம்ரான் நசீர் இருவரு ம் இணைந்து ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவ ர்களுக்கு பக்கபலமாக, மொகமது ஹபீ ஸ் ஆடினார். 

முன்னதாக பாக். பெளலர்கள் சிறப்பா க பந்து வீசி ஆஸி.யின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். சோகைல் தன்வீர் 3 விக்கெட் வீழ்த்தினார். 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி - 20 போட்டிகள் பொது மைதானமான சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 

இதன் முதல் போட்டி சார்ஜா கிரிக்கெ ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற து. இதில் பாக். அணி டாசில் வெற்றி பெற்று பீல்டிங்கை தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், வாட்சன் மற்றும் வார்னர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். ஆனால் ஆஸி. அணி ரன் எடுக்க திணறியது. 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19,3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டை யும் இழந்து 89 ரன்னில் சுருண்டது. அந் த அணி சார்பில் 1 வீரர் கூட கால் சதத் தை தாண்டவில்லை. 

துவக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக, 25 பந்தில் 22 ரன் எடுத்தார். இதில் 2 பவு ண்டரி அடக்கம். தவிர, ஒயிட் 15 ரன் னையும், கேப்டன் பெய்லி 14 ரன்னையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில் சோகைல் தன்வீர் 13 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, மொகமது ஹபீ ஸ், சயீத் அஜ்மல் மற்றும் ரஜா ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், உமர் குல் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி 90 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற எளிய இல க்கை ஆஸி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 14.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்னை எடு த்தது. 

இதனால் பாகிஸ்தான் அணி இந்த முத ல் டி - 20 போட்டியில் 7 விக்கெட் வித் தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னி லை பெற்று உள்ளது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், கீப்பர் கம் ரான அக்மல் 24 பந்தில் 31 ரன்னை எடு த்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, இம்ரான் நசீர் 22 ரன்னும், கேப்டன் மொகமது ஹபீஸ் 17 ரன்னும், நசீர் ஜாம் ஷெட் 10 ரன்னு ம், சோயிப் மாலிக் 9 ரன்னும் எடுத்தனர்.  

ஆஸ்திரேலிய அணி சார்பில், ஹில்பெ ன்ஹாஸ், கம்மின்ஸ் மற்றும் வாட்சன் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மொக மது ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்