குஜராத்தில் 2ம் கட்ட தேர்தல்: 1,374 பேர் மனுத்தாக்கல்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

அகமதாபாத், டிச. 6 - குஜராத் சட்டப் பேரவைக்கான 2 ம் கட்ட தேர்தலுக்கு ஆயிரத்து 374 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குஜராத் மாநில சட்டசபைக்கு வரும் 13, 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 87 தொகுதிகளில்846 பேர் போட்டியிடுகின்றனர். 2 ம் கட்ட தேர்தல் நடைபெறும் 95 தொகுதிகளில் போடடியிட ஆயிரத்து 374 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 

அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மணிநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: