முக்கிய செய்திகள்

தங்கம் விலை பவுன் ரூ.16 ஆயிரத்தை தாண்டியது

Jewel

 

மதுரை,ஏப்.17 - தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு ரூ.16 ஆயிரத்தைத் தாண்டியது. 2007-ல் பவுன் விலை ரூ.7 ஆயிரத்தில் இருந்தது. அதிலிருந்து நாளுக்கு நாள் விலை கூடிக்கொண்டே வந்தது. 1930 களில் தங்கம் பவுன் வெறும் ரூ. 6 ஆக இருந்ததாம். முதல் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்ட தியாகராஜபாகவதர் தங்கத்தட்டில்தான் சாப்பிடுவாராம். தங்க ஊஞ்சலில் தான் ஓய்வெடுத்து ஆடி மகிழ்வாராம். அந்தக் காலத்தில் ரூ.10 ஆயிரம் ஒரு படத்திற்கும் ரூ. ஆயிரம் ஒரு நாள் இரவு நாடகத்திற்கு வாங்கி பெரும் புகழ் பெற்றவர் பாகவதர். ஒரு நாள் இரவு வாங்கிய ஆயிரத்தில் 166க்கும் மேற்பட்ட பவுன்களை வாங்கிக் குவிக்கலாம். தற்போதைய நிலை என்ன என்பதை பார்த்தால் தாய்மார்களின் நிலை பரிதாபத்திஏற்கு உரியதாக உள்ளது. இதை நினைத்துத்தானோ என்னவோ அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொலை நோக்கு பார்வையாக தாலிக்கு ஒரு மணப்பெண்ணுக்கு 4 கிராம் (அரைபவுன்) தருவதாக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தங்கத்தின் விலை இன்னும் கூடும் என்று புல்லியன் வட்டாரம் கூறுவது ஏழைத்தாய்மார்களின் நெஞ்சில் ஈட்டி பாய்வது போல் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: