முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமிதாப்பை கசாபோடு ஒப்பிட்ட கவிஞர் மறுப்பு தெரிவித்தார்

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், ஜன. 16 - உருது கவிஞர் நிதா பாசில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். உருது கவிஞரான நிதா பாசில் (74) அண்மையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோபக்கார இளைஞர் என்ற பட்டம் அமிதாப் பச்சனுக்கு ஏன் அளிக்கப்பட்டது? அவர் அஜ்மல் கசாப் போன்று ஒரு பொம்மை. ஒரு பொம்மையை சலீம்-ஜாவீதும், இன்னொரு பொம்மையை ஹபீஸ் சயீதும் உருவாக்கினர். பொம்மை தூக்கிலிடப்பட்டு விட்டது. ஆனால் அதை உருவாக்கியவர் சுதந்திரமாக உள்ளார் என்றார். இந்த கருத்தை தெரிவித்த அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

நான் அமிதாப்பை தீவிரவாதி என்று கூறவேயில்லை. சர்ச்சையை கிளப்ப மீடியா தான் என் கருத்தை திரித்துவிட்டது. நான் அமிதாப்பை பற்றி பேசவில்லை. கோபக்கார இளைஞர் இமேஜைப் பற்றி தான் பேசினேன். அவர் திறமையான கலைஞர். அது ஏன் அமிதாப்பை மட்டும் கோபக்கார இளைஞர் என்கிறோம்? 74 வயதாகும் அன்னா ஹசாரேவை மறந்துவிட்டோமா? என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்