எடியூரப்பாவுக்கு எதிரரன வழக்கு பெங்களூர் ஐகோர்ட்டில் தள்ளுபடி

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஏப்ரல்.- 28 - கர்நாடக ஜனதா கட்சி தலைவராககமுன்னாள் முதல்வர் எடியூரப்பாவை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பெங்ளூர் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.  கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜகவிலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். இந்த கட்சியை பிரசன்ன குமார் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கினார். அப்போது தேர்தல் ஆணையம் இந்த கட்சியை பதிவு செய்து, மாநில கட்சியாக ஏற்றுக்கொண்டது. பிரசன்னகுமார் சம்மதத்துழன் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவராக கடந்த டிசம்பர் மாதம் ஏடியூரப்பா பொறுப்பேற்றுக்கொண்டார். இடையில் பிரசன்ன குமாருக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. கட்சியை என்னிடமிருந்து எடியூரப்பா   அபகரித்துக்கொண்டதாக பிரசன்னகுமார் பேட்டியளித்தார். இதற்கிடையில் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இது செல்லாது என்று பெங்களூர் ஐகோர்ட்டில் பிரசன்ன குமார் வழக்கு தொடர்ந்தார்.  கர்நாடகத்தில் சட்ட சபை தேர்தல்  நடைபெற உள்ள இந்த நேரத்தில் இந்த வழக்கு எடியூரப்பாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இரு தரப்பு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி அப்துல் நாசர் தீர்ப்பளித்தார். கர்நாடக ஜனதா கட்சியின் தலைவராக எடியூரப்பாவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது செல்லும். அவரை தலைவராக அங்கீகரிக்க தேர்தல் அணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.        

இதை ஷேர் செய்திடுங்கள்: