கேரளாவில் 106 வயது பாட்டி மரணம்

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ஆழப்புழா, மே. 18  - கேரளாவில் 106 வயதுப் பாட்டி மரணமடைந்தார். இவர் தனது 103 வது வயதில் 4 ம் வகுப்புத் தேர்வை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழப்புழா அருகேயுள்ள குறியநாடு பகுதியை சேர்ந்தவர் தொம்மன். இவரது மனைவி ஏலிக்குட்டி. இவருக்கு குரியன், தாமஸ், மேத்யூ, ஜோசப், வர்க்கீஸ் ஆகிய 5 மகன்களும், மேரி என்ற மகளும் உள்ளனர். இதில் அரசு ஊழியரான ஒரு மகனும், மகளும் உள்ளுரிலும், மற்றவர்கள் வெளி நாடுகளிலும் வசித்து வருகின்றனர். கேரளாவில் பள்ளிக்கு செல்லாத வயதானவர்களுக்காக அரசு சார்பில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சேர்ந்து படிக்க ஏலிகுட்டிக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதுகுறித்து தனது மகனிடம் கூறினார். 

இதையடுத்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் வாரந்தோறும் நடந்த பயிற்சி வகுப்பில் ஏலிக்குட்டியை சேர்ந்தார். தள்ளாத வயதிலும் மகனுடன் பள்ளிக்கு சென்றார். இதை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து அரசு சார்பில் நடந்த சிறப்பு தேர்வில் கலந்து கொண்டு ஏலிக்குட்டி 4 ம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இதனால் மூலம் கேரளாவில் அதிக வயதில் பள்ளி தேர்வு எழுதி சாதனை படைத்தார். இந்நிலையில் வீட்டில்இருந்த ஏலிக்குட்டி தனது 106 வயதில் இறந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: