முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலப்படத்தில் நடிக்க ஆசை: நடிகை வான்ரோஸ்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

கிளாஸ்கோ, ஜூலை. 10  - அயர்லாந்திலேயே மிகப் பெரிய பலானப் பட நடிகையாக நான் உருவெடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் கவர்ச்சி நடிகை அவா வான் ரோஸ். தற்போது இவரைத் தேடி ஏகப்பட்ட நீலப் பட வாய்ப்புகள் குவிகிறதாம். விரைவில் இவர் அயர்லாந்தின் முதல் நீலப்பட நாயகி என்ற பெருமையைப் பெறப் போகிறார். இவர் தனது பெரிய மார்பகத்தை அறுவைச் சிகிச்சை மேலும் பெரிதாக்கியதைத் தொடர்ந்து நீலப் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளதாம். அவா ஒரு மாடல் அழகி ஆவார். ஆனால் அவரது முக்கியக் குறிக்கோள் மிகப் பெரிய நீலப்பட நடிகையாக வேண்டும் என்பதுதானாம்.

அவா எல்லாவற்றையுமே வெளிப்படையாகவே பேசுகிறார். வாழ்க்கை வாழ்வதற்கே.. அதுவும் செக்ஸியாக வாழ வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துள்ளாராம் அவர்.  இவர் சமீபத்தில் தனது பெரிய மார்பகங்களை அறுவைச் சிகிச்சை மூலம் மேலும் பெரிதாக்கினார். தற்போது மறுபடியும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து மேலும் பெரிதாக்க திட்டமிட்டுள்ளாராம். அவாவின் கவர்ச்சி சிறகடித்துப் பறப்பதைப் பார்த்து தற்போது அவரைத் தேடி நீலப்பட வாய்ப்புகள் நிறையவே வருகிறதாம்.

அவாவின் பேராசை என்னவென்றால் அயர்லாந்தின் மிகப் பெரிய நீலப்பட நடிகையாக உருவெடுக்க வேண்டும் என்பதாம். ஆண்களை தூங்க விடாமல் கலங்கடிக்க வேண்டும் என்பது அவரது பேராசை நம்பர் டூ ஆகும். அவாவுக்கு அவருடைய தந்தைதான் பெரிய சப்போர்ட்டாம். நான் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் எனது தந்தையின் பேராதரவு உள்ளது. நான் கொடுத்து வைத்தவள் என்கிறார். டப்ளினில் பிறந்த அவாவுக்கு போல் டான்ஸ் என்றால் உயிராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்