முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 13 - உணவு பாதுகாப்பு சட்த்தில் 10 திருத்தங்களை செய்யும்படி சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு உணவு பாதுகாப்பு அவசர சட்டத்தை சமீபத்தில் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், இச்சட்டம் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று தெரிவித்திருந்தார். டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமரை சந்தித்த முலாயம்சிங், சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது அவசர சட்டத்தில் 10 திருத்தங்களை செய்யும் படி அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த முலாயம்சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், உணவு பாதுகாப்பு மசோதா மட்டுமல்ல, வேறு சில அரசின் செயல்பாடுகளையும் நாங்கள் ஏற்கனவே விமர்சித்துள்ளோம். உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கு விவசாயிகளிடம் அதிகளவில் உணவு தானியங்களை குறைந்தபட்ச விலையில் அரசு கொள்முதல் செய்யும் அபாயம் உள்ளது என்றார். 

மத்திய அரசுக்கு இதே போல பல சந்தர்ப்பங்களில் முலாயம்சிங் மிரட்டல் விடுத்தாலும் மிகவும் இக்கட்டான தருணங்களில் அவர் அரசை காப்பாற்றி உள்ளார். முலாயம்சிங் மீதான வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்த வழக்கு இம்மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 67 சதவீத மக்கள் பலன் பெறுவர். அவர்களுக்கு 5 கிலோ அரிசி ரூ. 3 விலையிலும், கோதுமை ரூ. 2 விலையிலும், பிற தானியங்கள் ரூ. 1 விலையிலும் கிடைக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்