பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர்: சத்ருகன் சின்ஹா

புதன்கிழமை, 24 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை. 25 - பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார குழு தலைவராக நரேந்திர மோடி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு மூத்த தலைவர் எல்.கே. அத்வானி எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார். சமரசத்துக்கு பிறகு அவர் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார். பின்னர் இருவரும் சந்தித்து கொண்டனர். 

நரேந்திர மோடியை பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்க பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் திட்டமிட்டுள்ளார். இதற்கு பாரதீய ஜனதாவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான சிவராஜ்சிங், சவுகான், பாரதீய ஜனதாவின் தனித்துவம் பெற்ற தலைவர் அத்வானிதான் என்று கூறியிருந்தனர். அம்மாநில பிரச்சார போஸ்டரில் நரேந்திர மோடியின் படத்தை போடாமல் புறக்கணித்தார். இந்த நிலையில் பாரதீய ஜனதாவை சேர்ந்தவரும், இந்தி நடிகருமான சத்ருகன் சின்ஹாவும் மோடிக்கு தனது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்கு மிக தகுதியானவர் அத்வானிதான் என்று கூறியுள்ளார். 

இது குறித்து சத்ருகன் சின்ஹா கூறியதாவது, 

நரேந்திர மோடி தற்போது புகழ் பெற்றவராக இருக்கலாம். மீடியாக்கள் அவருக்குரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டன. இதற்கான நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் பதவிக்காக முன்னுரிமை அவருக்கு அளிக்கப்படலாம். ஆனால் என்னை பொறுத்தவரை அத்வானிதான் அந்த பதவிக்கு மிகவும் சிறந்தவர். அனுபவம் வாய்ந்த முதிர்ச்சி பெற்றவர். அதே நேரத்தில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு நான் எதிரானவன் அல்ல. இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: