எல்லையில் ஊடுருவ முயன்ற பாக். படையினர் விரட்டியடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

ஜம்மு, ஆக. 19 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் குப்வாரா பிரிவில் மீண்டும் ஊடுருவல் மற்றும் தாக்குதல் முயற்சியில் பாகிஸ்தானியப் படைகள் இறங்கின. ஆனால் ராணுவம் அதை வெற்றிகரமாக முறியடித்தது. கேரன் பகுதியில் இந்த சில்மிஷத்தில் பாகிஸ்தானியப் படைகள் நேற்று அதிகாலையில் ்ஈடுபட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானியத் தரப்பிலிருந்து திடீர் நடமாட்டம் அதிகரித்ததால், இந்தியப் படையினர் சுதாரிப்புடன் செயல்பட்டு முறியடித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் பாகிஸ்தான் தரப்பி?ல நடந்துள்ள 19 வது ஊடுறுவல் முயற்சி மற்றும் போர் நிறுத்த மீறலாகும் இது. ஆகஸ்ட்6 ம் தேதி ஐந்து இந்தியப் படை வீரர்களை பாகிஸ்தானியப் படைகள் தாக்குதல் நடத்திக் கொலை செய்தன. அதன் பிறகு தொடர்ந்து பாகிஸ்தானியப் படைகள் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: