முக்கிய செய்திகள்

அயோத்தி விவகாரம் - அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
SupremeCourt 2

புதுடெல்லி,மே.10  - அயோத்தி பிரச்சினையில் அலாகாபாத் ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு ஏதோ ஒரு புதுமையானதாக இருக்கிறது என்றும் சுப்ரீம்கோர்ட்டு கூறியுள்ளது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் இருக்கும் ராமர் ஜென்மபூமி,பாபர்மசூதி இருக்கும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலம் ஆகியவைகளை 3 பிரிவினர்களுக்கு அலாகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச், பிரித்து கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் முஸ்லீம்கள் அமைப்பு மற்றும் பல அமைப்புகள் அப்பீல் செய்தன. அப்பீல் மனுமீதான விசாரணை நீதிபதிகள் அப்டாப் ஆலம், ஆர்.எம். லோதா ஆகியோர்கள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது அலகாபாத் ஐகோர்ட்டில் லக்னோ பெஞ்ச கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். லக்னோ பெஞ்ச் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு ஏதோ ஒரு புதுமையாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட அமைப்புகள் நிலைத்தை பிரித்து கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டை கேட்கவில்லை. அப்படி இருந்தும் நிலத்தை பிரித்துக்கொடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தை சுற்றிலும் மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கரில் எந்தவித மதவழிபாடுகளும் நடக்கக்கூடாது. அதற்கு மேல் உள்ள நிலம் தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: