முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயன தாக்குதல் நடத்திய சிரியாவை தண்டிக்க வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப். 9 ​- அப்பாவி மக்கள் மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடத்திய சிரியாவை தண்டிக்க வேண்டும் என்று விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதில் அப்பாவி மக்கள் உயிரிழந்த படங்களை நாம் பார்த்தோம். அதன் பிறகும் நாம் கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது. எனவேதான் எந்த மாதிரியான உலகில் நாம் வாழ விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்க ஒருங்கிணையுமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கேட்டுக் கொள்கிறேன். சிரியா ரசாயன தாக்குதல் நடத்தியது நமது தேசி ய பாதுகாப்புக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். அதனால்தான் சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். எனினும் இந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை நான் நாடியுள்ளேன். நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நமது நாடு வலுவாக இருக்கும் என்றார். 

சிரியா மீது வரையறைகளுக்கு உட்பட்ட தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றம் அடுத்த வாரம் வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவில் 51 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்