முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதியில் சட்டவிரோதமாக தங்கிய உள்ளபட 700 பேர் கைது

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

ரியாத், பிப்.2 - சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கிய இந்தியர்கள் உள்பட 700 வெளிநாட்டினரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

 சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட, நி்தாகத் சட்டத்தின் மூலம் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தனியார் நிறுவனங்களில் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால், இந்தியர்கள் உள்பட லட்சகணக்கான வெளிநாட்டினர் வேலை இழந்தனர். இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக தங்கிய வெளிநாட்டினர் தங்களது ஆவணங்களை சரி செய்து கொள்ளவும், அவ்வாறு செய்யாதவர்கள் வெளியேறவும் உத்தவிடப்பட்டது. தற்காலிக வேலைக்காக வந்த ஏராளமான இந்திய தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், ரியாத்தில் கடந்த சில நாட்களாக அந்நாட்டு போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கிய ஏமன், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 700 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 200 க்கும் மேற்பட்டோர் காய்கறி விற்பவர்கள், சிறு வியாபாரிகள், அல் யூனுஸ் மாவட்டத்தில் மட்டும் இதுபோல் 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹய் அல் வசாரா பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த முறையான ஆவணங்கள் இல்லாத 9,000 பேரை கைது செய்துள்ளதாக ரியாத் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒரு சில இடங்களில் போலீஸாரின் சோதனையை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஏராளமானோர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதே போல் கிழக்கு மாகாண பகுதியில் 19,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே வாரத்தில் 1,900 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago