இந்திய அணி சார்பில் அதிகமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் - கோக்லி

புதன்கிழமை, 25 மே 2011      விளையாட்டு
kohli1

மும்பை, மே. - 25 - இந்திய கிரிக்கெட் அணி சார்பில், அதிகமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்று கூறியுள்ளார் இந் தியாவின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோக்லி. தற்போது மூத்த வீரர்கள் பலர் இடம் பெறாத நிலையில், இந்திய கிரிக் கெட் அணி மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் செய்து அந்த அணிக்கு  எதிராக விளையாட இருக்கிறது.காம்பீர் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்ட கோக்லி மேலும் கூறியதாவது - எனக்கு உடற்தகுதி குறித்த பிரச்சினை தற்போது எதுவும் இல்லை. சீனியர் வீரர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்றதால் ஓய்வு எடுத்துள் ளனர். நானும் அதிக போட்டிகளில் ஆடியிருந்தாலும் ஓய்வு குறித்த எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை ஆவலுடன் எதிர்பார் க்கிறேன். வரும் காலங்களில் இந்திய அணியில் நிரந்தரமான ஒரு இட ம் பிடிக்க எனக்கு கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாக இத்தொடரை கருது கிறேன்.இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், வீரர்களான எங்களு க்குள் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெருக்கடிகளை கடந்து மேற்கு இந்தியத் தீவு மண்ணில் சாதிக்க வேண்டும். எங்களது இளம் அணி இத னை சாதித்து காட்டும் என்று நம்புகிறேன். பெங்களூர் அணிக்காக ஐ.பி.எல். போட்டியில ஆடும் நான், கிறிஸ் கெய்ல் வருகைக்கு பின் அணி பலமடைந்துள்ளதை காணுகிறேன். தற் போதைய நிலையில் எங்களது அணி ஐ.பி.எல். கோப்பையை வெல் லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: