ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை சீற்றம்

Iceland-Volcanno

 

லண்டன்,மே.27 - ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஏற்பட்ட எரிமலை சீற்றத்தை விட அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பாவின் பல நாடுகளில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அதனால் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ஐஸ்லாந்து நாடு வட அட்லாண்டிக் பெருங்கடலில் வடக்கு பகுதியில் இங்கிலாந்துக்கு அருகே உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஒரு எரிமலை வெடித்தது. அது ஐரோப்பிய நாடுகளில் பரவியதால் பல நாட்கள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன் காற்றில் பரவியதில் விமான என்ஜினுக்குள் சாம்பல் புகுந்து விடும் என்பதாலும், கண்பார்வை கிடைக்காது என்பதாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏறக்குறைய ஒரு கோடி விமானப் பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர். இதனால் விமான போக்குவரத்து தொழில் பெரும் பாதிப்பை அடைந்தது. விமான கம்பெனிகளுக்கு 170 கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது. 

அதே போன்ற எரிமலை வெடிப்பு தற்போதும் ஏற்பட்டுள்ளது. கிரிம்ஸ்வோட்டின் என்ற எரிமலை வெடித்தது. அதனால் ஏற்பட்ட புகை மண்டலம் வான் வெளியில் 20 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளது. இந்த புகை இங்கிலாந்து மற்றும் வட கிழக்கு ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவி வருகிறது. இதை தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, வட இங்கிலாந்து, வட அயர்லாந்து விமானங்கள் ரத்தாகி உள்ளன. எரிமலை சாம்பல் காற்றில் பறந்து பிரான்சு, ஸ்பெயின், ஜெர்மனி, போலந்து, நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளிலும் பரவும் என தெரிகிறது. இந்த புகை மண்டலம் காரணமாக 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 2 ம் உலகப் போருக்குப்பின் அதிகளவில் விமான நிலையங்கள் மூடப்பட்டது இதுவே முதல் முறை. கடந்த 2010 ம் ஆண்டு ஏற்பட்ட எரிமலை சீற்றத்தை விட இது அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ