முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் கோரிக்கையை ஏற்க பாபா ராம்தேவ் மறுப்பு

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.2 - ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக டெல்லியில் வரும் 4 ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். அவரது போராட்டத்துக்கு நாடெங்கும் லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஊழலுக்கு எதிராக இந்தியா முழுவதும் மீண்டும் ஒரு விழிப்புணர்வு எழுச்சி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 

ஊழலுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி அதிகமானால் அது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறி விடக் கூடாதே என்று பிரதமர் மன்மோகன்சிங் பயப்படுகிறார். மத்திய மந்திரி கமல்நாத்தை அனுப்பி அவர் ராம்தேவ்வை சமரசம் செய்தார். ஆனால் அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. 

இதையடுத்து பிரதமர் நேற்று முன்தினம் ராம்தேவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர் ஊழலை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் பிரதமரின் கோரிக்கையை ராம்தேவ் மறுத்து விட்டார். திட்டமிட்டபடி 4 ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கும் என்று அவர் அறிவித்துள்ளார். ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பா.ஜ.க ஆதரவு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே ராம்தேவுடன் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு நடத்த வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் கட்காரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய வரி ஏய்ப்பாளர்கள் அயல்நாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை உடனே அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிற 4 ம் தேதி யோகா குரு ராம்தேவ் டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கிறார். அவரின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அவருடன் உடனே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவியேற்றதும் ஊழல், கறுப்பு பணம் குறித்த பிரச்சினையை 100 நாட்களுக்குள் எடுத்து முறையாக கையாளும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை இந்த விஷயத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இது குறித்து பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு ராம்தேவுடன் உடனே பேச்சுவார்த்தையில் இறங்கி அவரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிதின் கட்காரி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago