முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபா ராம்தேவுக்கு வி.எச்.பி. பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

ஜெய்பூர்,ஜூன்.14 - ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவ் பிரசாரம் செய்ததையும் உண்ணாவிரதம் இருந்ததையும் விஸ்வ இந்து பரிஷத் பாராட்டியுள்ளது. இந்தமாதிரியான போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு ஆதரவாக பாபா ராம்தேவ் 8 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதனையொட்டி ஊழல் மற்றும் கறுப்புப்பணத்தை ஒழிக்க சில நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு சம்மதித்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து வி.எச்.பி. தலைமை செய்தி தொடர்பாளர் வீரேஷ்வர் திவேதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக அண்ணா ஹசரே மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர்களின் போராட்டத்தால் ஆட்சியில் உள்ளவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராம்தேவ் போராட்டத்தை ஒடுக்க ஆட்சியில் உள்ளவர்கள் முயன்றார்கள். ஆனால் இறுதியில் ஜனநாயகம்தான் வெற்றிபெறும் என்று ஆட்சியாளர்களை எச்சரித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றும் வீரேஷ்வர் கூறினார். ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது ஒரு தேச பற்றுள்ள ஒரு இயக்கமாகும். தேசியவாதத்தை இந்த இயக்கம் எப்போதும் ஆதரித்து வருகிறது. இந்த இயக்கத்தை தாக்கி வருபவர்கள் சரியான மனநிலை வளர்ச்சி இல்லாதவர்கள் என்றும் திவேதி கூறினார். பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ராம்தேவ் குறித்து காங்கிரஸ் தலைவர் திக்விஜ்ய்சிங் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த திவேதி, அவரது மனநிலை இந்த நிலையில் இருப்பதற்கு நாங்கள் மிகவும் இரக்கப்படுகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago