முக்கிய செய்திகள்

ஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ``ரெளத்ரம்''

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆகஸ்ட் - 6 - ஆர்.பி.செளத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மிகப்பிரமாண்டமான முறையில் ஜீவா நடிக்கும் ரெளத்ரம் படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. கோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜீவா நடித்து வெளிவரும் அடுத்தபடம் ரெளத்ரம் கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், கணேஷ் ஆச்சரிரயா, ஜெயபிரகாஷ், பாபு ஆண்டனி, லஷ்மிராமகிருஷ்ணன், ஸ்ரீநாத், சத்யன், டி.வி.மோனிகா நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு என்.சண்முசுந்தரம், இசை பிரகாஷ்நிக்கி, பாடல்கள் தாமரை, லலிதானந்த், கோகுல். கலை சிவராஜ், நடனம் கணேஷ் ஆச்சார்யா, கல்யாண். எடிட்டிங் மதன்குணதேவா, ஸ்டன்ட் அனல்அரசு, தயாரிப்பு நிர்வாகம் அமிர்தராஜ், பாலாஜி, தயாரிப்பு மேற்பார்வை ஏ.பி.ரவி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் தெலுங்கில் பிரபலமான இயக்குனரான சூரயகிரனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இணை தயாரிப்பு பி.சுரேஷ்செளத்ரி,  தயாரிப்பு ஆர்.பி.செளத்ரி. 

வித்தியாசமான கதைக்களம், விதவிதமான கதாபாத்திரங்கள், கதைக்கேற்ற படப்பிடிப்பு இடங்கள் என்று ரெளத்ரத்தை இழைத்திருக்கிறோம் என்றார் இயக்குனர் கோகுல்.

ரெளத்ரம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமா? என்று இயக்குனர் கோகுலிடம் கேட்டோம். தலைப்பில் இருக்கிறது ஆக்ஷன், ஆனால் படத்தில் அழகான குடும்பம், தெளிவான நட்பு, மெண்மையான காதல், துரோகம் எல்லாம் இருக்கும். வாழ்க்கையில் அதிகம் பார்த்த கதாபாத்திரங்கள், ஆனால் திரையில் அவர்களை கொண்டு வராமல் விட்டிருப்போம். அவர்களை திரையில் கொண்டு வந்திருக்கேன். ஒவ்வொரு மனிதனிக்குள்ளேயும் கோபம் இருக்கு. அந்த கோபம் எந்தநேரத்தில் எந்த இடத்தில் வெளிப்பட வேண்டுமோ அப்போது வெளிப்பட வேண்டும். எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் வெளிப்படக்கூடாது. எல்லோருக்குமே எல்லா உணர்ச்சிகளும் இருக்கிறது. சுற்றி இருப்பவர்களின் செயல்பாடுகள் தான் நமது குணாதிசயங்களை பிரதிபலிக்க வைக்கிறது என்ற ஒற்றை வரியில் ரெளத்ரம் படத்தின் திரைக்கதை பிண்ணப்பட்டிருக்கிறது என்றார் கோகுல். சென்னை, பாண்டிச்சேரி மற்றும் சுவிட்சர்லாந்தில் ரெளத்ரம் வளர்ந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: