முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிராயசித்தம் தேடும் முன்னாள் அமைச்சர்கள்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சங்கரன்கோவில் ஆக 19 - சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவிலில் முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் நேருவும், பன்னீர்செல்வமும் வழிபாடுகள் செய்தனர். தினமும் ஒரு புதுப்புகார்கள் தி.மு.க. அமைச்சர்கள் மீது கிளம்பும் நிலையில் என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் அவர்கள் உள்ளனர். இதுவரை தங்கள் தலைவர் பேச்சை கேட்டு கோயிலுக்கு செல்ல மாட்டேன் என்று வீரவசனம் பேசிய காலம் போய் அம்மா ஆட்சியில் கோயில்களுக்கு சென்று செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் தேடும் நிலையில் உள்ளனர். நேற்று முன்தினம் சங்கரன்கோவில் வருகை தந்த முன்னாள் அமைச்சர்கள் நேருவும், பன்னீர்செல்வமும் கோயிலில் அமைந்துள்ள ராகு கேதுவை வழிபட்டனர். பின்னர் சர்ப்ப விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் அங்கு அமர்ந்திருந்து வெகு நேரம் வழிபட்டனர். பின்பு கோமதி அம்பாள் சன்னதியில் உள்ள வினைகள் தீர்க்கும் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்தனர். இதில் அமர்ந்து செய்யும் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அனைத்து சன்னதிகளிலும் பொறுமையாக அமர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக சாமி கும்பிட்டனர். யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வருகை தந்ததால் கட்சியினர் யாரும் அதிகமாக கூடவில்லை. தாங்கள் கோயிலுக்கு வருவதை தங்கள் தலைவருக்கு தெரிவித்து விட்டு வந்தார்களா அல்லது அவரை போல ரகசியமாக வந்தார்களா என்று தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!