பெண்கள் பார் வைத்து நடத்திய பால் தாக்கரே பேரன் கைது

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      இந்தியா
Bal-Thackeray

மும்பை,மார்ச்.11 - மும்பையில் பெண்கள் பார் வைத்து நடத்திய சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேயின் பேரன் நிஹார் தாக்கரேவை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பை நகரில் பெண்கள் பார் வைத்து நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதால் எல்லா கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் பெண்கள் பார் வைத்து நடத்தி வருகிறார்கள். மும்பையில் சாந்த குரூஷ் பகுதியில் பால் தாக்கரேயின் பேரன் நிஹார் தாக்கரே பெண்கள் பார் வைத்து நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சோதனை நடத்தினர். அப்போது பெண்கள் 9 பேர் ஒரு சுவருக்கு அப்பால் ஒளிந்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாரில் பெண்கள் விபசாரத்திற்கு வற்புறுத்தப்பட்டது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் மீட்டனர். மேலும் இந்த பாரை வைத்து நடத்திய நிஹார் தாக்கரே மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பால்தாக்கரேயின் மூத்த மகன் பிந்தா என்பவர் மகன்தான் நிஹார். பிந்தா திரைப்படம் தயாரித்து வந்தார். ஒரு கார் விபத்தில் பிந்தா இறந்துவிட்டார். மும்பையின் பல பகுதிகளில் நிஹார் பெண்கள் பார் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதையும் தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: