ஜெயலலிதாவுடன் -என்.ரங்கசாமி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      இந்தியா
jaya-ranga 1

 

சென்னை, மார்ச் - 1 4 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை என்.ரங்கசாமி சந்தித்து பேசினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேற்று காலை (12.3.2011 ​ சனிக் கிழமை), அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சருமான என். ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்தில் தான் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கி, அதற்கு அங்கீகாரம் கிடைத்ததற்காக, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்நிகழ்வின் போது அ.தி.மு.க. சார்பில், பொருளாளர்   ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,  தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ., கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி.,  அமைப்புச் செயலாளர்  செ. செம்மலை, எம்.பி., மற்றும் புதுச்சேரி மாநில செயலாளர் ஏ. அன்பழகன், எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் ஓம்சக்தி சேகர், எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட  செயலாளர் வி. ஓமலிங்கம், எம்.எல்.ஏ., ஆகியோரும் உடன் இருந்தனர்

.அதே போல், புதுச்சேரி மாநில அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில், அதன் பொதுச் செயலாளர் வி. பாலன், மாநில செயலாளர்களான  என்.எஸ்.ஜெ.ஜெயபால், என். ஞானசேகரன் மற்றும் வழக்கறிஞர்  ஏ. பக்தவச்சலம், டி. துளசிகுமார், விஜயகுமார்,  எம். நசீம் ஆகியோரும் உடன் இருந்தனர். 

சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், மரியாதை நிமித்தமாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினேன். கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் விரைவில் முடிவு செய்வோம் என்றார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்: