அவதூறு செய்தி: இலங்கை அணி திருப்பி அனுப்பப்பட்டது

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.5 - சென்னையில் தனிப்பட்ட முறையில் விளையாடுவதற்காக வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி உடனடியாக அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு செய்யும் வகையில் அந்நாட்டின் வலைதளத்தில் கட்டுரை வெளியிட்டதை கண்டித்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இலங்கை அணிக்கு இங்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பி விட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துனர்.

16 பேரை கொண்ட இந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் நேற்று

முன்தினம் நள்ளிரவு திடீர் என்று சென்னை வந்தனர். இரவில் தங்கி விட்டு காலையில் அவர்கள் நேரு விளையாட்டு அரங்கத்தில் விளையாடுவதாக இருந்தது.

தகவல் அறிந்த சென்னை போலீசார் இந்த பிரச்சணையில் உடனடியாக தலையிட்டு இலங்கை அணியினரை திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஆகஸ்ட்டு 4-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை தனிப்பட்ட அமைப்பு ஒன்றின் சார்பில் நேரு அரங்கத்தில் நடைபெற இருந்த கிரிக்கெட்டில் இலங்கை அணியினர் பங்கேற்பதாக இருந்தது. இதற்கு வாய்மொழியாக அனுமதி வழங்கிய நேரு அரங்கத்தின் அதிகாரியை மாநில அரசு சஸ்பென்ட் செய்துள்ளது.

இலங்கையில் தமிழின படுகொலையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு பயிற்சிக்காக வந்த இலங்கை ராணுவத்தினரையும், விளையாட்டு குழுவினரையும், தமிழக அரசு பல தடவை திருப்பி அனுப்பியிருக்கிறது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் எந்த இடத்திலும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க கூடாது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறிவருகிறார்.

இந்த நிலையில் தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதும் கடிதங்களை கொச்சைப்படுத்தி இலங்கையில் பாதுகாப்பு அமைச்சக வலைதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டது.

இதற்கு எதிராக தமிழகம் கொந்தளிந்த்து எழுந்ததை தொடர்ந்து கட்டுரை வாபஸ் பெறப்பட்டு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. எனினும் கட்டுரையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியினர் வந்த மாத்திரத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: