ஐ.நா. கூட்டத்தின் போது மோடி - ஷெரீப் சந்திப்பு இல்லை

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.7 - இந்த மாதத்தின் இறுதியில் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்திப்பு நடத்த வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. தற்சமயம் உள்ள இருநாட்டு உறவின் நிலையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஐ.நா. பொதுக் கூட்டத்துக் கிடையே இருநாட்டுப் பிரதமர் களும் சந்திப்பு நடத்துவது குறித்து எந்தப் பக்கத்திலிருந்தும் இது வரை முயற்சிகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை.

இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பை இந்தியா ரத்து செய்துவிட்ட நிலை யில் மோடிக்கு ஒரு கூடை மாம் பழங்களை ஷெரீப் அன்பளிப்பாக அனுப்பி வைத்திருக்கிறார்.

வரும் 26 முதல் 29ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் இருப்பார். பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்போ 22 முதல் 27ம் தேதி வரை அங்கு இருப்பார். எனினும் இருநாட்டுப் பிரதமர்களும் சந்திப்பு நடத்துவது சாத்தியமில்லை என்கின்றன வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: