நைஜீரியாவில் தீவிரவாதிகள் 100 பேர் கொலை

செவ்வாய்க்கிழமை, 9 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

யோந்தே, செப்.10 - நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் 100-க்கும் மேற்பட்டோர் அண்டை நாடான கேமரூனின் ராணுவ உதவியுடன் கொல்லப்பட்டதாக நைஜீர்ய அரசு தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போகோ ஹராம் தீவிரவாதிகள் அந்த நாட்டில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்குள்ள கிறுஸ்துவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து தாக்கும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக அண்டை நாடுகளின் உதவியை நைஜீரியா நாடியது. இந்த நிலையில், போகோ ஹராம் தீவிரவாதிகள் 100-க்கு மேற்பட்டோரை அண்டை நாடான கேமரூனின் ராணுவம் அழித்ததாக நைஜீரியாவின் அரசு வானொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து நைஜீரிய அரசு செய்தி தொடர்பாளர் கூறும்போது, "போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு இதுவரை கேமரூன் ராணுவம் மிகப் பெரிய பின்னடைவுகளை தந்துள்ளது. அது போல மீண்டும் ஒரு முக்கிய அடிதான் இது.

சனிக்கிழமை அன்று கம்பாரு நகாலாவில் உள்ள நமது பாதுகாப்பு படைகளை குறிவைத்து போகோ ஹராம் குண்டுகளை வீசினர். இதற்கு பதிலடி தரும் விதமாக அவர்களை நோக்கி கேமரூன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட போகோ ஹராம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: