முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு: கருணாநிதி மகள் அரசு தரப்பு சாட்சியாக சேர்ப்பு

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.15 - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

2ஜி வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவரித்தனை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் மற்றும் 16 பேர் மீதும் 9 நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக 30 பேரின் பெயர்களை அமலாக்கத் துறை பட்டியலிட்டுள்ளது. இப் பட்டியலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

2ஜி வழக்கை விசாரித்த அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங், துணை இயக்குநர்கள் சத்யேந்திர சிங், கமல் சிங், ஆ. ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் ஆசீர்வாதம் ஆச்சாரி, தொலைத்தொடர்புத் துறையின் அப்போதைய உள்ளிட்டோரும் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 17-ம் தேதி தொடங்கும் என்று நீதிபதி ஓ.பி. சைனி ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony