முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்றத்திலிருந்து நேபாள பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்தவர் பலி

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      உலகம்
Nepal 2023 01 25

நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டீசலை ஊற்றி தீக்குளித்தார். 

நேபாளம் நாட்டின் புதிய பிரதமராக கடந்த டிசம்பர் மாதம் சி.பி.என். மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்த புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், நேபாள நாடாளுமன்றத்திலிருந்து நேற்று முன்தினம் பிற்பகலில் பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டீசலை ஊற்றி தீக்குளித்தார். 

உடனடியாக அந்த பகுதியிலிருந்து பிரதமர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தீக்குளித்து நபரை மீட்டு பாதுகாப்புப் படையினர் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.  தற்கொலைக்கு முயன்ற நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

காவல்துறையின் விசாரணையில் தீக்குளித்த நபர், இல்லம் மாவட்டத்தை சேர்ந்த பிரேம் பிரசாத் ஆச்சார்யா( 37) எனத் தெரிய வந்துள்ளது. மேலும், பிரதமர் வெளியேறும் நேரத்தில் அவர் தீக்குளித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து