முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோபைடனின் கடற்கரை இல்லத்தில் மீண்டும் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      உலகம்
Biden 20221 02 02

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடனின் கடற்கரை இல்லத்தில் நேற்று எப்.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரகசிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை என ஜோபைடனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்

துணை அதிபராக இருந்த போது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக ஜோபைடன் மீது குற்றம் சாட்டப்பட்டது.  இதையடுத்து ஜனவரி மாதம் 22-ம் தேதி பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வழக்குரைஞர் பாப் பாயர் தெரிவித்திருந்தார். அப்போது  ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் என்றும், ஒபாமா நிர்வாகத்தின் உக்ரைன், சீனாவில் உளவுத்துறை சேகரிக்கும் தகவல்கள் மற்றும் ஈரானின் ஏவுகணைத் திட்டம் பற்றிய முக்கியத் தகவல்களை உள்ளடக்கியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், டெலவேர் மாகாணத்திலுள்ள ஜோபைடனின் தனியார் அலுவலகம் மற்றும் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் நேற்று 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரகசிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை என ஜோபைடனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.                   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து