முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்லிகை, என் மன்னன் மயங்கும் பாடல் புகழ் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் : சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      சினிமா
Vani-Jayaram 2023 02 04

Source: provided

சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

1945-ம் ஆண்டில் வேலூரில் பிறந்த வாணி ஜெயராமின் இயற்பெயர் கலைவாணி. வங்கி ஊழியராக பணியாற்றிய வாணி ஜெயராம், வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற போது, அவரின் திறமையை அடையாளம் கண்டது இந்தி திரையுலகம்.

1971-ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் 10,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார். கேள்வியின் நாயகனே, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்பவை உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் புகழ்பெற்றார் வாணி ஜெயராம். 

தமிழ் திரையுலகில் 1974-ம் ஆண்டு தீர்க்கசுமங்கலி என்ற படத்தின் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை முதல் முறையாக பாடினார்.  ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என புகழப்படுபவர் வாணி ஜெயராம். 1975, 1980 மற்றும் 1991- ம் ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.  இந்தாண்டு குடியரசு தினத்தன்று ஒன்றிய அரசின் பத்மபூஷன் விருது வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் மலர்க்கொடி கூறும் போது, நான் எப்போதும் காலை 10.15 மணிக்கு வீட்டிற்கு வருவேன். அப்படித்தான் இன்றும் 10.45 மணி அளவில் வீட்டுக்கு வந்த காலிங்பெல் அடித்தேன். நான்கு, ஐந்து முறை பெல் அடித்தும் கதவை திறக்கவில்லை. அப்போது எனக்கு சந்தேகம் வந்ததது. பின்னர் போன் செய்தேன் எடுக்கவில்லை. 

என் கணவரிடம் தொலைபேசியில் அழைக்கச் சொன்னேன். அவரும் ஐந்து முறை முயற்சித்தும் தொலைபேசி அழைப்பு எடுக்கப்படவில்லை. கீழ் வீட்டுக்காரரிடம் சென்னோம். பிறகு, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தோம்.

உள்ளே சென்று பார்த்தபோது அவர் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்தார். அவரது நெற்றியில் அடிப்பட்டிருந்தது. நான் 10 வருடங்களாக இங்கே பணி செய்து வருகிறேன். அவருக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது என்று  மலர்க்கொடி தெரிவித்தார். 

மறைந்த வாணி ஜெயராமின் தலையில் காயம் இருந்ததால் சந்தேக மரணம்  என போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு ஓமந்தூரார் மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாணி ஜெயராம் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து