முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் கடவுள் இல்லை விமர்சனம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      சினிமா
SA-Chandrasekhar 2023 02 06

Source: provided

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, சரவணன், சாக்ஷி அகர்வால், யுவன் மயில்சாமி உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம் நான் கடவுள் இல்லை. கதை, வீச்சருவாள் வீரப்பன் என்ற சரவணன் சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்குக் காரணமான  போலீஸ் அதிகாரி சமுத்திரகனி, வழக்கறிஞர் நீதிபதி உள்ளிட்டோரை பழிவாங்க வேண்டும் என தீர்மானிக்கிறான். இதற்காகவே சிறையில் இருந்து தப்பித்து வெளியே வந்து சமுத்திரகனியின் மகளை கடத்துகிறான். இன்னொருபுறம் எஸ்ஏ சந்திரசேகர் கடவுள் போல ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில்  சமுத்திரகனியின் மகள், சரவணன் தன்னுடைய அப்பாவை கொலை செய்ய துடிக்கிறார். அவரை காப்பாற்றுங்கள் என, கடவுளுக்கு லெட்டர் எழுதுகிறார். கடவுளாக வரும் எஸ் ஏ சந்திரசேகர் காப்பாற்றினாரா? இல்லையா என்பது தான் கதை. சமுத்திரகனி போலீஸ் அதிகாரியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  சரவணன் வில்லனாக மிரட்டுகிறார்.  சாக்ஷி அகர்வால், இனியா உள்ளிட்டோர் தங்களின் கதாபாத்திரங்களை அழகாக செய்து இருக்கின்றனர். சந்திரசேகர் ஒரு கடவுள் அவதாரம் போல படத்தில் வலம் வருகிறார். படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அழகு சேர்த்துள்ளது. மொத்தத்தில் நான் கடவுள் இல்லை படம் ஒரு சுவாரஸ்யமான படமாக உருவாகியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து