முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பயம் வேண்டாம்

நம்முடைய மார்பின் ஒரு பக்கம் மட்டும் வலியை உணர்ந்தால் இது இருதய சம்பந்தமான நோய் என்று பயப்படவேண்டாம்.  அதற்கு எலும்பு முறிவு, குருத்தெலும்பு அழற்சி, வைரஸ் தொற்றுகள், மார்பு தசைகளுக்கு கொடுக்கப்படும் கஷ்டம், அதிகப்படியான அமில சுரப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம்

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு முதல் நோபல் பரிசு

உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தவர் கவிஞர் ரவீந்திராத் தாகூர். இவர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார். இளம் பருவத்திலேயே இலக்கியம், ஓவியம், இசை , கவிதை என்று பன்முகத்திறமைக் கொண்டிருந்தார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றவர் அங்குள்ள கல்விமுறையை அறிந்துகொண்டார். அதன்படி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வங்காளத்தில் 'சாந்தி நிகேதன்' பள்ளியைத் துவங்கினார். இங்கு படித்தவர்தான் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. ’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பிற்காக தாகூருக்கு இலக்கியத்திற்காக நோபல் பரிசு கடந்த 1913 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அப்பரிசை வென்ற  முதல் ஆசியர் என்ற பெருமையும் தாகூருக்கு உள்ளது.

கிடைத்தது ஆதாரம்

லிபியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் கிடைத்த ஆதாரங்களின் படி, மனிதர்கள் 10,000 வருடங்களுக்கு முன்பே காட்டு தானியங்கள் மற்றும் தாவரங்களை வைத்து பானைகளில் சமைத்துள்ளது தெரிய வந்தள்ளது. ஆரம்பத்தில் சைவமாகத்தான் இருந்த மனிதர்கள் , பின் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடும் அசைவத்திற்கு மாறியிருக்கின்றனர்.

புதிய எரிபொருள்

பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்கியுள்ளனர் ஜப்பான், யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அந்த வகை பாசியிலிருந்து தயாரிக்கப்படும் வேதியியல் கலவையை விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்த முடியுமாம். இந்த கலவை மூலம் ஆண்டுக்கு 33,000 கலோன்கள் எரிபொருள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஏரோஜெல் - உலகின் மிகவும் எடை குறைந்த பொருள்

ஏரோ ஜெல், இதுதான் உலகிலேயே மிகவும் எடை குறைந்த பொருளாகும். மேலும் அடர்த்தியும் குறைவு. அதே நேரத்தில் இந்த பொருள் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரையிலும் வெப்பத்தை தாங்கக் கூடியது. அதே போல மைனஸ் 78 டிகிரி வரையிலும் உறை பனியை தாங்கும் திறன் கொண்டது. இந்த பொருளை 1931 இல் முதன் முறையாக சாமுவேல் ஸ்டீபன்ஸ் கிஸ்ட்லர் என்பவர் உருவாக்கினார். தற்போது விண்வெளி வீரர்களுக்கு தேவையான உடைகளை இதைக் கொண்டே தயாரிக்கிறார்கள். உறைந்த காற்று, உறைந்த நெருப்பு, உறைந்த மேகம் போன்ற செல்லப் பெயர்களும் இதற்கு உண்டு. தொடக்கத்தில் ஏரோஜெல் சிலிக்கா ஜெல்களை கொண்டு தயாரிக்கப்பட்டன. பின்னர் சாமுவேல் இதை அலுமினா, குரோமியா, டின் டையாக்சைடு, கார்பன் உள்ளிட்ட பல்வேறு தனிமங்களை கொண்டு தயார் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago