முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விவிஐபி மரம்

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி புத்தர் காம்ப்ளக்சுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் விவிஐபி மரம் என கருதப்படும் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த புகழ்பெற்ற மரத்தை பேணிக் காக்க ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது  அந்த மாநில அரசு.இந்த மரத்தை சுற்றி பாதுகாப்பு வளையங்களும், 4 காவலர்களும் பாதுகாப்பு பணியி்ல் எப்போதும் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட நாசிகளை கொண்ட விலங்கு எது தெரியுமா?

பொதுவாக மனிதன் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு மூக்கு மட்டுமே காணப்படும். ஆனால் ஒரு விலங்குக்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றல்ல, நான்கு மூக்குகளை கொண்டுள்ளது. அவை ஸ்லக்குகள் என்ற ஒரு வகை நத்தைகள் ஆகும். இவற்றின் மூக்கு மனிதனின் நாசிகளைப் போல வாசனைகளை நுகரும் வேலையை மட்டும் செய்வதில்லை. மாறாக நிலத்தில் கலந்துள்ள ரசாயனம், சத்தங்கள், வெளிச்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான செயல்பாடுகளையும் அவை மூக்கினாலேயே மேற்கொள்கின்றன... என்றால் ஆச்சரியம் தானே.

கூகுள் வளாகத்தில் ஆடுகள் சுற்றித் திரிவது உங்களுக்கு தெரியுமா?

உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் ஜாம்பாவான் கூகுள் நிறுவனம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உலகில் உள்ள அனைத்து தேடுபொறிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு இன்று முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் வளாகத்தில் 200 ஆடுகள் சுற்றி திரிய விடப்படுகின்றன என்று சொன்னால் நம்புவதற்கு ஆச்சரியமாக உள்ளதா.. ஆனால் அதுதான் உண்மை.  வாரத்துக்கு ஒரு முறை வளாகத்தில் வளர்ந்துள்ள புற்களை தின்பதற்காக 200 ஆடுகளை வாடகைக்கு பிடித்து திரிய விடப்படுகிறது. இதற்கு என்ன காரணம், புல்வெட்டும் இயந்திரம் மற்றும் அதற்கான செலவும் இதுவும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால் ஆடுகளுக்காவது புற்கள் பயன்படட்டுமே என்றுதான் கூகுள் வளாகத்தில் ஆடுகள் திரிய விடப்படுகின்றன. 

மகளிர் நினைவாக

உலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, நியூயார்க் நகரில் ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது

'அர்சிட்' விண்கற்கள்

இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு விண்கற்கள் பொழிவு நிகழும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அர்சிட் எனப்படும் விண்கற்கள் இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் இருண்ட வானில் தீப்பந்துகள் போல காட்சியளிக்குமாம்.இதனை தொலைநோக்கி இல்லாது வெறும் கண்ணால் கூட பார்க்கலாம். அர்சிட் விண்கற்கள் 1790 ஆம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 20-30 நிமிடங்கள் வானில் பிரகாசமாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மக்களும் வருடத்தின் இறுதியில் இந்த விண்கற்கள் பொழிவினை காண முடியும்.

தீபாவளி ஓர் ஆச்சரியமான செய்தி

19 ஆம் நூற்றாண்டு வரை தமிழின் எந்த இலக்கிய ஆவணத்திலும் தீபாவளி என்ற சொல் கிடையாது. வட நாட்டில் இருந்தும், விஜயநகர பேரரசின் போதும் தமிழகத்துக்கு தீபாவளி வந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தீபாவளியை இந்துக்கள் தவிர சமணர்கள், புத்தர்கள் மற்றும் சில வெளிநாடுகளிலும் கொண்டாடுகின்றனர்.1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் - தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. பழங்காலத்தில் தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தீபாவளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். எது எப்படியோ இன்றைக்கு தீபாவளிக்கு புத்தாடை புனைந்து, பலகாரங்கள் செய்து, புதுப்படம் ரீலிஸ் செய்தால்தான் தமிழனின் தீபாவளி நிறைவு பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago