முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காற்று மாசுபாடு

காற்று மாசுபாட்டால் சூரிய மின்சக்தி உற்பத்தி 25 சதவீதம் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சீனா, அரேபிய தீபகற்பம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காற்று மாசுபாடு அதிகம் உள்ளதால் மின்சக்தி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

தட்டான்கள் இருக்கும் இடத்தில் கொசு இருக்காது ஏன் தெரியுமா?

டிராகன்ஃபிளைஸ்(Dragonflies) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டான், தட்டாரப்பூச்சி எனவும், தும்பி எனவும், தட்டாம்பூச்சி எனவும் அழைப்பார்கள். தட்டான் பூச்சிகள் மிக வேகமாக லாவகமாக பறக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவாக பறக்க கூடியவை. இவை ஒரு ஆண்டில் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கக் கூடியது. ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 503 தட்டான் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தட்டான் பூச்சிகள் ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் ஒரு உயிரினம். டினோசர்களை விட மிகவும் பழமையானவை. தட்டான்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. அவைகள் சூடான காலநிலை மற்றும் தண்ணீருக்கு அருகில் வாழ விரும்புகின்றன. தட்டான் பூச்சிகள் கொசுக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் தொல்லை குறைவாக இருக்கும்.

சிக்னலிலேயே வாழ்நாளை கழிக்கும் மனிதன்

நகரத்தில் வாகனம் ஓட்டுவது நரகத்தை விட கொடுமையானது. அதிலும் போக்குவரத்து சிக்னலுக்காக நிற்கும்போது ஏற்படும் அழுத்தம் சொல்லி மாளாது. புதிய ஆய்வு ஒன்றில் ஒவ்வொரு மனிதரும் தனது  வாழ்நாளில் சராசரியாக 6 மாதங்களை சிக்னலில் காத்திருக்கும் போது செலவிடுவதாக தெரியவந்துள்ளது. பயண நேரத்தில் 20 சதவீதம், அதாவது 75 விநாடிகளை சிவப்பு சிக்னலில் செலவாகிறது.

வயதான மூதாட்டி

உலகின் வயதான நபராக கருதப்பட்ட இத்தாலியின் எம்மா மார்ட்டின் லூகியாவின் மறைவுக்குப் பிறகு தற்போது ஜமைக்காவின் வைலட் பிரவுன் அந்த பெருமையை பெற்றுள்ளார். 117 வயதான இவர். ‌உணவில் பன்றி, கோழி வகை உணவை அறவே தவிர்கிறாராம். 1900-ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்த இவர் கடந்த மாதம் தனது 117வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

உணர்த்தும் உண்மை

ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சக்கரையாம், அடிக்கரும்பு இனிக்க நுனி கரும்பு எதற்கு? என்ற பழமொழிகள் உண்டு. நல்ல சொற்கள் இருக்கும் போது துன்பம் தரும் சொல்லை ஏன் சொல்ல வேண்டும் என குறிக்கும் வகையில் அந்த பழமொழி தத்துவமாக மலர்கிறது. ஆனால், கரும்பில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.

பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல்

விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை, மலையளவு குவிந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள். இவை இரண்டுக்கும் ஒரு சேர தீர்வு கண்டுள்ளனர் பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர். டில்லி இந்தியன் ஸ்டேட்டஸ்டிக்கல் இன்ஸ்டியூட் மாணவர்கள் 8 பேர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பெட்ரோலிய மூலப்பொருட்களை பிரித்தெடுத்துகும் முறையை கடந்த 2019ம் ஆண்டு கண்டறிந்தனர். இதற்காக அவர்கள் கடந்த 2020ம் ஆண்டு காப்புரிமையை பெற்றனர். அவர்கள் பீகார் மாநிலத்தில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோலிய பொருட்களை பிரித்தெடுக்கும் ஆலையை நிறுவியுள்ளனர். கிராவிட்டில் அக்ரோ மற்றும் எனர்ஜி என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த ஆலையை அவர்கள் வங்கி கடனாக பெறப்பட்ட ரூ25 லட்சம் பணத்தை கொண்டு துவங்கியுள்ளனர். இந்த ஆலையில் 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மொத்தம 175 லிட்டர் பயோ  பெட்ரோல் - டீசல் தயாரிக்கப்படுகிறது. அதுவும் லிட்டருக்கு ரூ.62 செலவில் இந்த பயோ-பெட்ரோல்-டீசல் தயாராகிறது. இதை அவர்கள் ரூ.70-க்கு விற்பனை செய்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago