முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எளிய முறை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதற்கு, ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். இதற்கு கீபோர்டு செயலியை ஓபன் செய்து, அதன் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை அளித்தினால் போதும்.

விருச்சிகாசனம்

விருச்சிகாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். கை, கால்கள் வலிமையடையும். மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அனைத்துச் சுரப்பிகளும் சீராக இயங்க உதவுகிறது. இதனால் கண் பார்வை கூர்மையடையும். தொடர்ந்து செய்து வந்தால் இழந்த சக்தியை மீட்க முடியும். மேலும், உடலின் சோர்வை போக்க முடியும்.

நீரில் இயங்கும் கணிணியை உருவாக்கிய ரஷ்யா

டிரான்சிஸ்டர்கள் எனப்படும் சிறிய கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரையிலும் கணிணியானது இயங்குவதற்கு பற்சக்கரங்கள், பிவோட்கள், நெம்புகோல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இவற்றை இயக்குவற்கு என தனியாக ஆற்றலும் தேவைப்பட்டது. இந்த சூழலில் 1936 இல் விளாடிமிர் லுகியானோவ் என்பவர் நீரை பயன்படுத்தி சில கணித முறைகளுக்கு தீர்வு காணக் கூடிய கணினியை உருவாக்கினார். இவற்றை கட்டிடங்களில் ஏற்படும் விரிசலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டன. பின்னாட்களில் இது வழக்கொழிந்தது. தற்போது இந்த நீர் கணினி மாஸ்கோவில் உள்ள பாலிடெக்னிக் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நியூஇயர் கொண்டாட

நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக போக விரும்புவது சென்னை மெரினா கடற்கரைதான். கிட்டத்தட்ட இரவு 8 மணிக்கே கடற்கரையில் விழா ஆரம்பித்துவிடும். நியூ இயர் கொண்டாட்டத்தின்போது கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டமாக இருக்கும் சென்னை மெரினா கடற்கரை. இங்கே கொண்டாட்டத்துக்கும் பஞ்சமிருக்காது. ஆடல், பாடல் என நள்ளிரவில் அமர்க்களமாகும் சென்னை.கடற்கரையைச் சுற்றியுள்ள அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, காமராஜர் நினைவகம் உள்ளிட்ட இடங்களிலும் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும். அதுமட்டுமின்றி நீங்கள் சென்னையில் உள்ள பல்வேறு மால்களிலும் புதுவருட கொண்டாட்டங்கள் களைகட்டும்.

சீன புல்லெட் ரயில்

சீனாவில், ஃப்யூக்சிங் என்று பெயரிடப்பட்டுள்ள புல்லெட் ரயில், பயணிகள் நெரிசல் உள்ள, சுமார் 1,318 கி.மீ. கொண்ட பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளது.  இந்த தூரத்தை புல்லெட் ரயில் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 400 கி.மீ. வேகத்திலும், சராசரியாக மணிக்கு 350 கி.மீ. வேகத்திலும் பயணிக்கும் திறன் பெற்றது. முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் அவசரகாலங்களில் ரயிலின் வேகத்தை தானாகவே குறைக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து புல்லெட் ரயிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறபம்சம்.

மிக அருகில்

மிக பெரிய கிரகமான வியாழன், பூமியில் இருந்து 60 கோடியே 80 லட்சம் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. கடந்த 3-ம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்த வியாழன் கிரகத்தை நாசா அனுப்பிய அதி நவீன சக்தி வாய்ந்த ஹப்பிள் விண்கலத்தின் டெலஸ்கோப் சமீபத்தில் மிக அருகில் போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்