முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

20 பில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் லெஸ்போஸ் தீவில் கண்டுபிடிப்பு

கிரீஸ் நாட்டில் உள்ள லெஸ்போஸ் தீவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிசய மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட மரம் ஒன்று மட்கி போகாத நிலையில் அப்படியே அதன் ஈரத்தன்மையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான மரம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மரத்தின் கிளைகளும் வேர்களும் அப்படியே இருந்ததாக அறிஞர்கள் வியப்படைந்துள்ளனர். மேலும், இந்த மரத்தை ஆராய்ச்சி செய்ததில் கிளைகளும் வேர்களும் நல்ல நிலையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.மேலும் ஆய்வில் 20 மில்லியன் ஆண்டுக்கு முன்பு நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மரம் நிலத்தடியில் புதைந்திருக்கலாம் என்றும், அப்போது எரிமலை சாம்பல் அந்த மரத்தின் மேல் பரவி இருக்கலாம், அதனால் இந்த மரம் நல்ல நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட அந்த மரத்தின் வயதை ஆய்வு மூலம் கண்டறியலாம்  இது மிகுந்த ஆச்சரியம் தானே..

கொடிய உயிர் கொல்லியான எயிட்ஸ்க்கு எதிராக தகவமைத்து கொண்ட மனித உடல்

இன்றைக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய வைரசான கொரோனாவைப் போல சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் உலகையே அச்சுறுத்தியது. தற்போது போலவே மனித நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சலூன் கடைகளில் தனித்தனி ரேசர்களில் சவரம் செய்வது தொடங்கி, மருத்துவ மனைகளில் டிஸ்போசபிள் சிரிஞ்ச் எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசி என நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹெச்ஐவி தொற்றுக்கு  ஆளாகி எந்தவித மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் உடல் நலம் தேறியுள்ளார். இது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்களை பரிசோதித்த போதிலும் கூட அவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது தடமின்றி அடியோடு மறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது உலகில் இரண்டாவது சம்பவம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.  இது தொடர்பான மருத்து ஆய்வு கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எய்ட்ஸை வெற்றிகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது படிப்படியாக பிறருக்கும் தோன்றலாம். அதே போல எதிர்காலத்தில் கொரோனாவையும் இந்த மனித உடல் வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கடலுக்கு அடியில் முட்டையை உடைத்தால் என்ன ஆகும்

முட்டையை நாம் நிலத்தின் மீது உடைத்தால் அது அப்படியே உடைந்து கலைந்து போவதை நம்மால் காண முடியும். அதே வேளையில் கடலுக்கு அடியில் உடைத்தால் என்ன ஆகும் தெரியுமா... கடலுக்கு அடியில் சுமார் 18 மீட்டர் அல்லது 60 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டாலே அங்கு அழுத்தம் அதிகரித்து காணப்படும். அது வெளிப்புறத்தில் காணப்படுவதை காட்டிலும் 2.8 மடங்கு கூடுதலான அழுத்தத்துடன் இருக்கும். இங்கு ஒரு முட்டையை உடைத்தால் அழுத்தம் காரணமாக அது கலைந்து போகாமல் ஒரு ஜெல்லி மீனைப் போல காட்சி அளிக்கும் என்பது ஆச்சரியம் தானே..

உலகுக்கு ஆபத்தான விண்கல்

4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு பூமிக்கு அருகே சுமார் 3.9 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வந்தது. சூரியனைச் சுற்றி வரும் இந்த விண்கல், 2060 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதைவிட இன்னும் அருகே, 1.2 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வரவிருக்கின்றது. சூரியக்குடும்பத்தில் சூரியனைச் சுற்றிவரும், இந்த விண்கல்லால் உடனடிப் பாதிப்பு இல்லாவிட்டாலும், பூமிக்கு ஆபத்தான விண்கற்களின் பட்டியலில் இதுவும் இடம் பெற்றிருக்கின்றது.

இரட்டையர்கள் பிறப்பது அரிதல்ல

நம்மில் பெரும்பாலோனோர் நினைத்து கொண்டிருப்பது போல இரட்டையர்களாக பிறப்பது அரிதான ஒன்று அல்ல. மாறாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு ருசிகர தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக இரட்டையர்கள் குறித்து 1915 முதல் ஆவணப்படுத்தப்பட்ட  ஆவணங்களின் மூலம், 1980 வரையிலான கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளில் 50 பேருக்கு ஒருவர் சாரி இருவர் இரட்டையர்களாக பிறக்கின்றனர்.  அதாவது கிட்டத்தட்ட 2 சதவீதம் பேர் இரட்டை குழந்தைகளாக பிறக்கின்றனர். 95க்கு பிறகு அதன் பிறப்பு விகிதம் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001 இல் 3 சதவீதம், 2010 இல் 3.3 சதவீதம் அதாவது பிறக்கும் 30 குழந்தைகளில் இருவர் இரட்டையர்கள் என்பதே அந்த ஆய்வு தெரிவிக்கும் சுவாரசிய தகவல்.

மெட்ரிக் முறையிலான கணக்கீடுகளை பயன்படுத்தாத நாடு எது தெரியுமா&?

இன்றைய நவீன உலகத்தில் நீட்டல், முகத்தல், நிறை என அனைத்தும் நவீன கணிதத்தின் மெட்ரிக் முறையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. நீர் பொருள்களை அளக்க லிட்டர், மில்லி லிட்டர் இப்படி, நீளத்தை அல்லது தூரத்தை அளக்க மில்லி மீட்டர், செமீ, மீட்டர் இப்படி, எடையை அளக்க கிராம், மில்லி கிராம், கிலோ கிராம்... இப்படி. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள சுமார் 200 நாடுகள் இந்த முறைகளையே அளவீடுகளுக்கு பயன்படுத்துகின்றன. ஆனால் இதை பயன்படுத்தாத நாடுகளும் உலகில் உள்ளது என்றால் ஆச்சரியமானது தானே.. அவை மியான்மர், லைபீரியா மற்றும் அமெரிக்கா.  அண்மையில் லைபீரியாவும், மியான்மரும் மெட்ரிக் அளவீடுகளை ஏற்பதாக அறிவித்தன. ஆனால் அமெரிக்கா மட்டும் விதி விலக்கு. அவை யார்டு, அவுன்சு, பவுண்டு என்று பழைய கணக்கை கொண்டுள்ளது என்றால் ஆச்சரியமானு தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago