முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கழுதைகளை காணவில்லை

இன்றைய தலைமுறையினரில் பலர், கழுதைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பைக்கூட பெற்றிருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கழுதை வீட்டு விலங்காக இருந்தது. கழுதை தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று.  40 ஆண்டுகள் வரைகூட கழுதைகள் உயிர் வாழும். கழுதைகள் தற்போது வெகுவாக அருகி வருகின்றன. 2007 - 2012 காலகட்டத்தில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 23% வீழ்ச்சி அடைந்தது. 2012 - 2019 ஆண்டுகளில் அது மேலும் 61.23% வீழ்ந்து, இப்போது வெறும் 1,20,000 கழுதைகள் மட்டுமே உள்ளன. இது உலகளாவிய போக்காக உள்ளது. சீனாவில் 1992-இல் ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன; இப்போது வெறும் 26 லட்சமாகச் சுருங்கி விட்டன.

கறிவேப்பிலையில் இவ்வளவு இருக்கா?

கறிவேப்பிலை அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது.சுமார் 10 முதல் 20 கறிவேப்பிலை இலையை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பிறகு அதில் இருந்து இலைகளை அகற்றுவதற்காக அதை வடிக்கட்டவும். வெறும் கறிவேப்பிலை தண்ணீர் சிலருக்கு பிடிப்பதில்லை. சுவைக்காக எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.இது கலோரிகளை எரிக்கவும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவுகிறது. இதன் மூலமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுப்பதோடு ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு எடையை குறைக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையில் மஹானிம்பைன் என்ற ஆல்கலாய்டு உள்ளது, இது உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

இவரை தெரியுமா?

2015-ம் ஆண்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் வருட சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.667 கோடி ஆகும். தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உயர்த்தப்பட்டது. இனி இவரது சம்பளம் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக இருக்கும்

32 மொழிகளை சரளமாக பேசுபவர்

நமக்கெல்லாம் ஒன்று இரண்டு மொழிகளையே ஒழுங்காக பேசுவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது. ஆனால் ஒருவர் 32 மொழிகளில் சரளமாக பேசி தள்ளுகிறார். அவர் யார் தெரியுமா.. ஐரோப்பா பாராளுமன்றத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளரான கிரேக்கத்தைச் சேர்ந்த Ioannis Ikonomou ஆவார். தொடக்கத்தில் புரூசெல்ஸ் நகரில் மொழிபெயர்ப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் தற்போது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெங்காளி, ஸ்வாஹிலி, துருக்கி என 32 மொழிகளில் வெளுத்து கட்டுகிறார்.

அமைதிக்கான வழி ...

வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச் செய்யும் நிலைதான் தியான நிலை. தியானம், நம் மனதை அமைதிபடுத்தி, தசைகளின் இறுக்கம் மற்றும் மனக்கவலைகளைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உடலில் ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலில் உள்ள திசுக்களைப் பாதுகாத்து, இதயம் தொடர்பான நோய்களை அண்ட விடாமல் தடுக்கிறது. தியானம் செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு, பிடித்த தெய்வத்தை நினைத்து வழிபடுதல் வேண்டும். தினமும் காலையில் 5 முதல் 6 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை தியானம் செய்தால் நல்ல பயன்கள் கிடைக்கும்.

புதிய தொழில்நுட்பம்

மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள, இஸ்ரேலைச் சேர்ந்த ’எலெக்ட்ரோட்’ (Electroad) எனும் நிறுவனம் புதிய தீர்வை முன்வைத்துள்ளது.எலெக்ட்ரிக் கார்கள் பயணிக்கும் போது ஒயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் உதவியுடன் சாலைகள் மூலம் சார்ஜ் செய்யும் முறை குறித்து அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்