முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மிகவும் சிறந்தது

குழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்சனைகளை கையாள அவர்களுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த சிகிச்சை மறைமுகமாக குழந்தைகளின் தேவைகளை புரிந்துகொள்வது. இதன் மூலம் குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரமுடியும். 3 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை பயன்படுத்தலாம்

சைவ உணவு சாப்பிடும் முதலை கேரளாவில் அதிசயம்

பொதுவாக சிறிய விலங்குகள், மீன்கள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் வகையைச் சேர்ந்தவைதான் முதலைகள். ஆனால் வடக்கு கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீஅனந்தபுரம் கோவில் என்ற இடம். இங்குள்ள கோவிலில் ஸ்ரீஅனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் அருள் பாலிக்கிறார்.  அக்கோயிலில் உள்ள குளத்தில் வசிக்கும் முதலை தான் இப்போது ஹைலைட். அவர்தான் நம்ம வெஜிடேரியன் முதலை. பாபியா என அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இது சில வேளைகளில் கோயிலுக்கு உள்ளேயும் வந்து விடுவதுண்டு.  கோயிலில் சமைக்கும் உணவுதான் இந்த முதலைக்கும் வழங்கப்படுகிறது.  இது எப்போது வந்தது என்று யாருக்கும் தெரியாது. கோயில் குருக்கள் அதற்கு கோயில் யானைக்கு கொடுப்பது மாதிரி சாதாரணமாக உணவை படைக்கிறார். நமக்கு படியளக்கும் பகவான்தான் அதற்கும் படியளக்கிறார் எனக் கூறும் குருக்கள், அந்த முதலை இதுவைர யாரையும் தாக்கியதில்லை என்கிறார். சாதுவான பூனை போல கோயில் பிரகாரத்தில் வலம் வருகிறார் முதலையார். 

வேகம் தேவை

இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.

பார்சுவ கோணாசனம்

பார்சுவ கோணாசனத்தை தொடர்ந்து செய்தால் இடுப்பு சதை பகுதி குறையும். ஜீரண மண்டலம் நன்கு தூண்டப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும். மேலும் சுவாச மண்டலம் நன்கு வேலை செய்யும்.

அமெரிக்காவில் எப்போது முதன்முதலாக இந்திய உணவகம் தொடங்கப்பட்டது

உலக அளவில் இந்திய உணவு வகைகள் மக்களால் விரும்பப்படும் உணவு வகைகளின் டாப் 10 பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. தோராயமாக 24 நாடுகளில் உள்ள மக்களில் 62 சதவீதம் பேர் இந்திய உணவை விரும்புகின்றனர். அதற்கு காரணம் இந்திய உணவு வகைகளில் காணப்படும் பல்வேறு வகையான ரகங்களும், அவற்றில் சேர்க்கப்படும் அரிதான மசாலா மற்றும் மூலிகை பொருள்களும் உலக மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் முதன்முறையாக இந்திய உணவகம் 1960களின் மத்தியில் தொடங்கப்பட்டது. பாம்பே மசாலா என்ற உணவகம் தான் பரவலாக கவனம் பெற்றது. தற்போது அமெரிக்காவில் சுமார் 80 ஆயிரம் இந்திய உணவகங்கள் உள்ளன. நியூயார்க் நகரில் தான் அதிக இந்திய உணவகங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக   சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ ஆகிய நகரங்களில் உள்ளன.

6 வயதில் கோடீஸ்வரனான சிறுவன்

ஆறே வயதான ரியான் என்ற சிறுவன் தனது பொம்மைகளை மதிப்பீடு செய்யும் வீடீயோவை பிரபலமான யூடியூப்பில் அப்ளோடு செய்ததின் மூலம் ஒரு   வருடத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை அச்சிறுவன் ஈட்டியுள்ளான். பொம்மைகளை அதிகமாக விரும்பும் ரியான் எந்த ஒரு பொம்மை வாங்குவதற்கு முன்பும் அதன் மதிப்பீடு பற்றி ஆராய்ந்த பின்பே அதனை வாங்குவார். தனது நான்கு வயதிலேயே தனது பெற்றோரின் உதவியுடன் தனது 'ரியான் டாய்ஸ் ரெவியூ' (Ryan Toysreview) என்கிற யூடியூப் சேனலை மார்ச் மாதம் 2015 ஆம் ஆண்டு துவங்கினர். ஆரம்பத்தில், ரியனின்  காணொளி பிரபலமடையவில்லை ஆனாலும் ரியான் மற்றும் அவனது பெற்றோர்கள் விடாமுயற்சியாக தினந்தோறும்  ஒரு காணொளியை பதிவேற்றம் செய்தனர் . ஜூலை 2015 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட   ரியனின் 'ஜியன்ட் எக்க் சர்ப்ரைஸ் '(Giant Egg Surprise) என்ற காணொளி  இணையத்தில்  வைரலானது. அந்த வீடியோவை இதுவரை 800 மில்லியன் மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்த யூடியூப் சேனலின் மூலம் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே மாதம் பத்து லட்சமாகும் . இந்த யூடியூப் சேனல் இதுவரை 1 கோடி ரசிகர்களை கொண்டுள்ளது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்