முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தொழில்நுட்ப வளர்ச்சி

கூகுள், கடந்த 8 வருடங்களாக முயற்சி செய்து அக்டோபர் மாதம் சோதனை முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. முதலில் எக்ஸ் லேப் என பெயரிடப்பட்ட கூகுளின் இந்த தானியங்கி கார்கள் தற்போது வேமோ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கார் மூலம் களைப்பு, போதை, கவனச் சிறதல்கள் போன்றவற்றால் உருவாகும் விபத்துகளை தவிர்க்க முடியும்.கண் தெரியாதவர்கள் கூட தனியாக வேமோவில் எளிதாக பயணிக்கமுடியும் என்கிறது கூகுள். ஜிபிஎஸ் செட்டிங்க்ஸ் மூலம் இந்த வகை கார்கள் சாலைகளில் உள்ள போக்குவரத்து சூழல், சிக்னல் போன்றவற்றை உணர்ந்து செயல்படுகின்றன.

16-ம் நூற்றாண்டிலேயே....

எமோஜிக்கள் எனப்படும் முகபாவனைகளை ஜப்பான் பொறியாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கினர். இந்தநிலையில், கடந்த 1635ம் ஆண்டிலேயே எமோஜிக்களின் பயன்பாடு இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாகியா நாட்டில் உள்ள ஸ்ட்ராசோவ் மவுண்டெயின்ஸ் எனும் கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான எமொஜி பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

மனிதனுக்கு போட்டியாக...

லண்டனைச் சேர்ந்த குழு ஒன்று படம் வரையும் புதிய ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது. லைன் அஸ் (Line-us) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ கடினமான படங்களை கூட அழகாகவும் மிகக் குறுகிய நேரத்திலும் வரையக்கூடியது. சந்தைக்கு வரும் முன்னரே இணையதளத்தில் 30 மணி நேரத்தில் 1000 லைன் அஸ் ரோபோக்கள் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முறையான பயிற்சி

தொடை பகுதியை வலிமையாக்கும் பயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக் என்று இரு வகைப்படும். பயிற்சியின்போது குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி, தசைகளுக்கு இறுக்கம் தந்து வலு சேர்ப்பது ஐஸோமெட்ரிக். இது முன் தொடையை வலிமையாக்கும். தசைக்கும் மூட்டுக்கும் தொடச்சியாக அசைவு கொடுத்து வந்தால் அது ஐஸோடானிக். இது பின் தொடையை வலுப்படுத்தும்.

நாம் வீசியெறியும் ஆடைகள் மட்க எத்தனை ஆண்டுகள் தேவை?

உலகம் முழுவதும் நாகரிகமடைந்த மனிதர்கள் ஆடைகளை அணிய தொடங்கினர். அதுவும் தற்போது டிசைன் டிசைனாக ஆடைகளை அணிந்து தள்ளுகிறோம். உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறோம். நாம் அணியும் ஆடைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் எவ்வளவு தெரியுமா...40 ஆண்டு காலம் ஆகுமாம். பெரும்பாலான உடைகள் சாயங்களாலும், ரசாயனங்களாலுமே நிறமேற்றப்படுவதால் அவை நிலத்தை விஷமாக்குகின்றன.

இந்தியாவில் இ-ரெயில்

விரைவில் இ-ரெயில் மூலம் மணிக்கு 700 மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன் திட்டம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. எலான் மஸ்க் என்பவரின் கற்பனையில் உருவான இந்த ஹைப்பர்லூப் பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வணிக ரீதியாக இந்த போக்குவரத்தை செயல்படுத்தவுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இந்த  இ-ரயில் போக்குவரத்தை செயல்படுத்த 5 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் இந்த திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது. ஹைப்பர்லூப் ஒன் திட்டத்தின் மூலம் 884 மைல் கொண்ட டெல்லி - மும்பை இடையேயான தூரத்தை வெறும் 80 நிமிடங்களில் கடக்க முடியும். வெற்றிகரமான இறுதிகட்ட சோதனைகளை தொடர்ந்து விரைவில் இத்திட்டம் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago