முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டாடா ஏர்லைன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.. தெரியாத செய்தி என்ன தெரியுமா.. இந்தியாவில் முதன் முதலில் விமான  போக்குவரத்தை இயக்கியது டாடா தான். அதன் நிறுவனர் Jehangir Ratanji Dadabhoy (JRD) Tata 1932 இல் அதை நிறுவனார். அப்போது அது டாடா ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் அப்போது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது. பின்னர் 1946 ஆல் அது ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது. அப்போது அது 'மகாராஜா; சின்னத்தை கொண்டதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1948 இல், ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பாவுக்கு விமான சேவைகளை தொடங்கியது. தனியார்-பொது துறை பங்களிப்புடன் சர்வதேச சேவைகள் இயக்கப்பட்டன. அரசு வசம் 49 சதம் பங்குகளும், டாடா வசம் 25 சதவீத பங்குகளும் இருந்தன. 1953 இல் எர் இந்தியாவை முழுக்க தேசியமயமாக்கி நேரு அறிவித்தார். இதற்கு டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா விமானம் டாடா வசமே திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதயம் அறிவோம்

அரை கிலோ கிராமுக்கு எடை குறைவான உறுப்புதான் இதயம். இதன் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது, இதய தசைகளுக்கு ரத்தம் கிடைக்காததனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவே, இதற்கு பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் அவர்களை மாரடைப்பில் இருந்து பாதுகாப்பதால்தான்.

குதிரை திறன் எப்படி பெயர் வந்தது

வாகனங்களானாலும், மோட்டார் உள்ளி என்ஜின்களானாலும் அவற்றின் திறனை ஹார்ஸ் பவர் என்கிற குதிரை திறன் அலகாலேயே அளவிடுகிறோம் அல்லவா.. இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா.. குதிரைத் திறன் என்ற பிரயோகத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ்வாட். இவர் வேறு யாருமல்ல நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த பொறியாளர்தான். தான் உருவாக்கிய நீராவி எந்திரம் எந்த அளவுக்கு பொருள்களை இழுத்துக் கொண்டு எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பதை நிரூபிக்க, என்ஜினின் செயல் திறனை அளவிட வேண்டியிருந்தது. அந்தக் காலங்களில் சாரட் வண்டிகளில் குதிரைகள் பூட்டப்பட்டு இயக்கப்பட்டன. சாரட்டுக்கு மாற்றாக வந்த ஆட்டோமொபைல் வாகனங்களின் செயல்திறனை கணக்கிட குதிரையின் வேகத்தை அளவிட அவர் முடிவு செய்தார். நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியை மேலே இழுத்து வருவதற்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. அதைக் கருத்தில் கொண்டு 149 கிலோ எடையை சுமந்து கொண்டு 100 அடி தூரத்தை ஒரு நிமிடத்தில் கடப்பதை ஒரு குதிரைத் திறன் (1 ஹெச்.பி.) என அவர் கணக்கிட்டார். பின்னர் அதவே அறிவியல் பூர்வமான கணக்கீடாக மாறி ஹெச்பி - குதிரை திறன் என்றானது.

சிறுநீரகத்தை பாதுகாக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.  வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம்.  காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிட வேண்டும்.

பெண்களின் திறமை

ஒருவரின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறிந்து கொள்ளும் மனரீதியான திறமை பெண்களிடம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு மாறுபாடு காரணமாக பெண்களுக்கு இத்தகைய திறமை உள்ளதாம். இதுகுறித்த ஆய்வில் பங்கேற்ற 89 ஆயிரம் பேரிடம் மனிதனின் கண்களை பார்த்து மனநிலையை அறியும் திறமை இருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த திறமை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உள்ளது.

சாதனை பாகுபலி-2

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடி படமாக வெளியாகியுள்ள 'பாகுபலி-2' திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. இந்த படம் 3 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படத்தை தவிர, தற்போது அறிமுகமாகியுள்ள பாகுபலி சேலைகள் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்