முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதட்டு தைலங்களை சேகரித்து சிறுமி கின்னஸ் சாதனை

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த Scarlett Ashley Cheng என்ற 6 வயது சிறுமி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்றால் நம்புவதற்கு சிறிது கடினம் தான். ஆனால் அதுதான் உண்மை. அவரும், அவரது சகோதரியான 8 வயது Kaylyn என்ற சிறுமியும் இணைந்து 3 388 உதட்டு தைலங்களை சேகரித்து வைத்துள்ளனர். தற்போது இது கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. லிப்ஸ்டிக்கை போலவே லிப் பாம் என அழைக்கப்படும் உதட்டு தைலம் நவீன பேஷனில் ஒரு அங்கமாக உள்ளது. உதடுகளில் விதவிதமாக பூசிக் கொள்ளும் 100 கணக்கான பிராண்டுகள் சந்தைகளில் குவிந்து கிடக்கின்றன. தங்களது பாட்டியிடமிருந்து இது குறித்து தெரிந்து கொண்ட குழந்தைகள் படிப்படியாக இதை சேகரிக்க தொடங்கி இன்று உலக சாதனையாக மாறியுள்ளது. 

காகித பாட்டில், Paper bottle

1907  ஓர் விஞ்ஞான அதிசயம் நடந்தது. அதுதான் லியோ பேக்லேண்ட் என்பவர் பாலிமர் பேக்லைட் எனப்படும் பிளாஸ்டிக்கை கண்டறிந்த ஆண்டு. அதன் பிறகு அணு ஆயுதத்தை விட உலகையே அச்சுறுத்தும் ஒரு நச்சாக மாறும் என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு உலகின் முக்கிய தேவை பிளாஸ்டிக்குக்கு ஒரு உடனடி மாற்று. இந்த சூழலில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்ததுதான் காகித பாட்டில். சுக்ஸி பாட்டில் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு இவற்றை 2 ஆண்டு ஆய்வுக்கு பின் வடிவமைத்துள்ளனர். எளிதில் மக்கக் கூடியதாகவும், கசிவுத்தன்மை அற்றதாகவும் இவை உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடா எப்படியோ பிளாஸ்டிக்கிலிருந்து தப்பினால் போதும் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.

உலகின் குண்டு பெண்

எகிப்தை சேர்ந்த எமான் என்ற 40 வயது பெண் பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். படுக்கையிலேயே 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரது உடல் எடை தற்போது 500 கிலோவை தொட்டுள்ளது. உலகிலேயே குண்டான பெண்ணான இவருக்கு, மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால், உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளவுள்ளார்.ஆனால் அரை டன் எடை கொண்ட இவரை ஏற்றிவர தனியார் விமான நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன. இவரை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில்,  இவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் வகையில் ரூ.2 கோடி செலவில் மருத்துவமனையில் பிரத்யேக அறையை உருவாக்கி வருகின்றனர். இந்த அறையில், டாக்டர்கள் அறை, கண்காணிப்பாளர் அறை, 2 கழிவறைகள், வீடியோ கான்பரன்சிங் அறை ஆகியவை இடம் பெறுகின்றன.

முகம் ஜொலிக்க

ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சை, முகம், கழுத்துப் பகுதியைத் துடைத்து எடுத்து, பின், பாதி தக்காளியை எடுத்து சர்க்கரையைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சரும பொலிவு தக்க வைக்கப்படும்.

ஜூனோ விண்கலம்

வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலம், வியாழன் கிரகத்தின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இதன் மூல் தெரியவந்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்ணை தெரியுமா. அவர் பெயர் வங்காரி மாத்தாய். கென்யா நாட்டின் இகதி எனும் சிறிய ஊரில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 1 இல்  பிறந்தவர் வங்காரி மாத்தாய். பெண்கள் கல்வி கற்க முடியாத சூழலில் இவர் படித்து அமெரிக்காவில் பட்டம் பெற்றார். மேலும் கென்யாவின் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். நைரோபி பல்கலையில் பேராசிரியரானார். முதல் பெண் பேராசிரியர் என்ற பட்டத்தையும் பெற்றார். மார்ட்டின் லூதர் கிங் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் தனது நாட்டில் இயற்கை வளத்தை காப்பதற்காக பசுமை பட்டை இயக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் 30 ஆண்டுகளில் 3 கோடி மரங்களை நட முயற்சி மேற்கொண்டார். இயற்கை, சுற்றுச்சூழல் மட்டுமின்றி, பெண்கள் கல்வி, ஒடுக்குமுறை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார். இவரது இயக்கம் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. இவரது போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இவருக்கு கிடைத்த செல்வாக்கால் தேர்தலில் போட்டியிட்டு அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவி வகித்தார். இயற்கை வளத்தை மேம்படுத்த எண்ணற்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago